Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதி 69 இல் இணைந்த மாஸ்டர் பிரபலம்.. விஜய் செம ஹேப்பி அண்ணாச்சி

தளபதி 69 இல் இணைந்த மாஸ்டர் பிரபலம்.. விஜய் செம ஹேப்பி அண்ணாச்சி

Thalapathy 69 : கோட் அலை இன்னும் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக தளபதி 69 படத்திற்கான பேச்சும் போய்க்கொண்டிருக்கிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் வினோத் முதல் முறையாக விஜய் உடன் இந்த படத்தில் கூட்டணி போட இருக்கிறார். […]

Thalapathy 69 : கோட் அலை இன்னும் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக தளபதி 69 படத்திற்கான பேச்சும் போய்க்கொண்டிருக்கிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் வினோத் முதல் முறையாக விஜய் உடன் இந்த படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.

இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டு மொத்த ரசிகர்களும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வினோத் கண்டிப்பாக ஒரு நல்ல படத்தை கொடுப்பார் என நம்புகின்றனர். வருகின்ற அக்டோபர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதற்கான லொகேஷனை இப்போது பார்த்து வருகிறார்கள். இதில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவர் தளபதி 69 இணைந்துள்ளார். அதோடு விஜய்க்கு மட்டும் அல்லாமல் இயக்குனர் வினோத்துக்கும் மிக நெருக்கமானவர்.

தளபதி 69 இல் இணைந்த மாஸ்டர் பிரபலம்

அதாவது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சத்யன் சூர்யா. அதேபோல் வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கைதி படங்களிலும் சத்யன் பணியாற்றி உள்ளார். இவ்வாறு விஜய், வினோத் இருவருக்குமே நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார்.

மேலும் கடந்த வருடம் தெலுங்கில் வெளியான தசரா படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதற்கு பிலிம்பேர் விருதையும் பெற்றிருந்தார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக தளபதி 69 பட வாய்ப்பு சத்யன் சூரியனுக்கு கிடைத்திருக்கிறது. தன்னுடைய கடைசி படத்தில் ஒளிப்பதிவாளராக தனக்கு பிடித்த கேமராமேன் வேலை செய்வதால் இப்போது விஜய் செம ஹேப்பி அண்ணாச்சி. மேலும் தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.