வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கேப்டன் வாரிசுக்கு நான் இருக்கேன்.. விஜய், சூர்யா செய்யாததை செய்யத் துணிந்த மாஸ்டர்

Vijay-Suriya-Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மறைவு இன்னமும் நம்ப முடியாததாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. அதனாலேயே அவருடைய பாதையை இப்போது பலரும் பின்பற்ற முன்வந்துள்ளனர். அதன்படி பல பிரபலங்கள் கேப்டன் போல் மக்களின் பசி தீர்க்க முடிவெடுத்திருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கேப்டனின் வாரிசுக்காக யாரும் செய்யாத ஒன்றை செய்ய துணிந்து இருக்கிறார் ராகவா மாஸ்டர். சமீபத்தில் தன் தாயுடன் கேப்டன் சமாதிக்கு இவர் சென்றிருந்தார். அதை தொடர்ந்து வீட்டுக்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவரிடம் விஜயகாந்த் மனைவியின் தங்கை சண்முக பாண்டியன் குறித்து பேசி இருக்கிறார். தற்போது ஹீரோவாக வளர்ந்து வரும் அவரை நீங்க எல்லாரும் பாத்துக்கணும் என்று கூறினாராம். அதைத்தொடர்ந்து லாரன்ஸ் எடுத்திருக்கும் முடிவை ஒரு வீடியோ மூலம் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

Also read: புத்தாண்டு மயக்கம் தெளிந்த விஷால்.. விஜயகாந்த் சமாதியில் கண்ணீரோடு போட்ட பெர்ஃபாமன்ஸ்

அதில் அவர் கூறியிருப்பதாவது, கேப்டன் எத்தனையோ நடிகர்களை வளர்த்து விட்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது அவருடைய மகனை நாம் சும்மா விட்டு விடலாமா? அதனால் நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன். அதாவது சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தயார்.

அது பாட்டு, சண்டை, ஒரு சீன் என எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அது மட்டுமல்லாமல் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் என்னை தாராளமாக அணுகலாம். நான் அவருடன் இணைந்து நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

Also read: புத்தாண்டு மயக்கம் தெளிந்த விஷால்.. விஜயகாந்த் சமாதியில் கண்ணீரோடு போட்ட பெர்ஃபாமன்ஸ்

ஏனென்றால் இப்போது முன்னணியில் இருக்கும் விஜய், சூர்யாவை வளர்த்து விட்ட பெருமை கேப்டனுக்கு உண்டு. ஆனால் அவருடைய மகன் நடிக்க வரும்போது இவர்கள் இப்படி ஒரு விஷயத்தை செய்ய முன்வரவில்லை. அப்படி இருக்கும் போது ராகவா லாரன்சின் இந்த செயல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்.

Trending News