புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஒரே பார்வையில் கிரங்கடிக்கும் மாஸ்டர் விஜய்யின் காதலி.. வைரலாகும் போட்டோஸ்

Master Vijay lover: ஹீரோயினாக பிரபலமாக வேண்டும் என்றால் பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தாலே போதும் அவர்களுடைய புகழ் நாலாபக்கமும் பறந்து விடும். அதிலும் ஆட்ட நாயகனாக ஜொலித்துவரும் விஜய்யுடன் நடித்து விட்டால் அவர்கள் ஒவ்வொருவருமே ரசிகர்களிடம் பேமஸ் ஆகிவிடுவார்கள்.

அப்படித்தான் மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தமிழில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் நடித்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். அந்த நடிகை வேறு யாருமில்லை பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன்.

அதன்பின் மாஸ்டர் படத்தில் விஜய்யின் காதலியாக நடித்து ரசிகர்களை இவர் பக்கம் இழுத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் நடித்திருக்கிறார். அத்துடன் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

உலக அழகியாக மாறிவரும் மாளவிகா மோகன

priyanka mohanan
malavikka mohanan

இப்படி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் கவர்ச்சிகரமான போட்டோக்களை விதவிதமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது கடற்கரை ஓரமாக ரிலாக்ஸ் ஆக இருந்து கருப்பு கலர் மாடல் டிரஸ் போட்டு ஒத்த பார்வையாலே ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் அழகிய போஸ் கொடுத்து போட்டோவை ஷேர் பண்ணி இருக்கிறார்.

இப்படி அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிடுவதால் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 4 மில்லியன் பாலோவர்கள் இவரை பாலோ பண்ணி வர்ணித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Trending News