ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டாப் நடிகரின் வீட்டில் நடந்த அதிகபட்ச சூட்டிங்.. விஜயகாந்துக்கு மட்டும் கொடுத்த முன்னுரிமை

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் சூட்டிங் நடைபெறுகிறது என்றால் ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு பிடித்து விடுவார்கள். அதில் தான் பெரிய பெரிய நடிகர்களின் பட சூட்டிங் நடைபெறும். இப்போதுதான் காட்சிக்கு தேவையானது போல் செட் போட்டு படம் எடுக்கின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் அனைத்தும் ஒரிஜினலாக தான் இருந்தது.

அந்த வகையில் டாப் நடிகர் ஒருவரின் வீட்டில் தான் அதிகபட்ச பட சூட்டிங் நடந்திருக்கிறது. அந்த நடிகர் வேறு யாரும் அல்ல. இப்போது தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் விஜய் தான். அவருடைய சாலிகிராம வீட்டில்தான் பல திரைப்படங்களின் சூட்டிங் நடந்திருக்கிறது. அதிலும் விஜயகாந்த் பட சூட்டிங் தான் அங்கு அதிகமாக நடந்திருக்கிறதாம்.

Also read: 100 கோடி வசூலை பார்த்தவுடனே விஜய்யுடன் கூட்டணியா? யாரும் எதிர்பார்க்காத மெகா காம்போ

ஏனென்றால் விஜயகாந்த் மற்றும் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் அவருடைய இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த நட்பின் காரணமாகவே அவருடைய படத்திற்கு அங்கு சூட்டிங் செய்ய ஈசியாக அனுமதி கிடைத்து விடுமாம்.

மேலும் அந்த சமயத்தில் கேரவன் வசதி எல்லாம் கிடையாது என்பதால் நடிகர்கள் அனைவரும் தயாராவதற்காக அங்கு இருக்கும் அறைகளை தனித்தனியாக பிரித்துக் கொடுப்பார்கள். அதில் விஜயகாந்த் தயாராக ஸ்பெஷலாகவே ரூம் ஏற்பாடு செய்யப்பட்டு விடுமாம். ஒவ்வொரு முறை அவர் அந்த வீட்டிற்கு ஷூட்டிங் வந்தால் அந்த அறை தான் அவருக்காக ஒதுக்கப்படுமாம்.

Also read: அப்பமே எம்ஜிஆர், விஜயகாந்த் திருப்பி அடித்த ரீவிட்.. விஜய்யை தூண்டும் மோசமான தொடர் தொந்தரவுகள்

அது மட்டுமல்லாமல் விஜய் அவருடைய ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ரொம்பவும் உரிமையோடு அந்த இடத்தில் எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய ஒரே நடிகரும் விஜயகாந்த் தான். அந்த அளவுக்கு அவர் விஜய் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

இப்போதும் கூட அவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான் அவர் விஜய்க்காக செந்தூர பாண்டி திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த விஷயம் இதுவரை பலரும் அறியாத புதிய தகவலாக இருக்கிறது.

Also read: கேப்டன் விஜயகாந்த்தால் நடுத்தெருவுக்கு வந்த நடிகை.. இப்பவும் மீள முடியாத சூழ்நிலை

Trending News