ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

May Release Movies: மே மாதம் வெளியாகும் 10 படங்கள்.. கவின் ஸ்டாருக்கு போட்டியாக வரும் சந்தானம்

மே மாதம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் அதை மனதில் வைத்து நிறைய படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏனென்றால் கண்டிப்பாக இந்த கோடை விடுமுறையில் படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் மே மாதம் வெளியாகும் 10 படங்களை பார்க்கலாம். சரத்குமார் மற்றும் சசிகுமார் ஆகியோர் கூட்டணியில் உருவாகி இருக்கிறது நாநா படம். மே 15ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித்தின் ரீல் மகளான அனிகா சுரேந்திரன் மற்றும் பவிஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம்.

இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சந்தானத்தின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருக்கிறது இங்கு நான் தான் கிங்கு. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற நிலையில் மே பத்தாம் தேதி படம் வெளியாகிறது.

கவினின் ஸ்டார் படத்துடன் மோதும் சந்தானம்

அதேபோல் சந்தானம் படத்திற்கு போட்டியாக கவினின் ஸ்டார் படம் வெளியாகிறது. சினிமா மீது ஆசை உடைய ஒரு இளைஞன் தனது கனவுக்காக எப்படி செயல்படுகிறான் என்பதுதான் இந்த படம். ஸ்டார் படத்தின் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

அதேபோல் மே பத்தாம் தேதி அமிர் சுல்தான், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் உயிர் தமிழுக்கு படமும் வெளியாகிறது. மேலும் மே மூன்றாம் தேதி காளி வெங்கட் மற்றும் சந்தோஷ் வேல்முருகன் ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பெடல் படம் வெளியாகிறது.

மேலும் சாய் தன்ஷிகா மற்றும் அசோக் நடிப்பில் உருவான த ப்ரூப் படமும் அதே நாளில் வெளியாகிறது. இதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் சுந்தர்சியின் அரண்மனை 4 படமும் மே 3 தான் வெளியாகிறது. இதில் ராசி கன்னா, தமன்னா போன்ற நடிகைகள் நடித்திருக்கின்றனர்.

மே ஒன்றாம் தேதி மகேந்திரன் நடிப்பில் உருவான மதி படம் வெளியாகிறது. இதே நாளில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களின் அப்டேட்டும் வர இருக்கிறது. இவ்வாறு மே மாதம் முழுக்க கொண்டாட்டமாக தான் வெளியாக இருக்கிறது.

Trending News