செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மானத்தை வித்தாவது டைட்டில வின் பண்றோம்.. ஆண்களை பகடைக்காயாக உருட்டும் மாயா மாஃபியா

Biggboss 7: இப்போது சோசியல் மீடியா பக்கம் போனாலே பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய விவாதம் தான் அதிகமாக இருக்கிறது. ஷோவை பார்க்க மாட்டேன் என்று வீம்பு பிடித்தவர்களை கூட டிவி முன் ஆஜராக வைத்திருக்கிறது இந்த சீசன். இதற்கு முக்கிய காரணம் மாயா என்பதில் சந்தேகம் இல்லை.

விளையாட்டை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காகவும் டைட்டிலை அடிக்க வேண்டும் என்பதற்காகவும் இவர் எடுக்கும் யுக்திகள் வேற லெவலில் இருக்கிறது. அதில் பல தந்திர வேலைகள் இருந்தாலும் சில விஷயங்களை பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என நினைக்கும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்களை அவர் இறக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஆரம்பத்தில் இருந்து அவர் ஆண்களை வீழ்த்துவதில் தீயாக வேலை செய்கிறார். சுருக்கமாக சொல்லப்போனால் அவர்களை பகடைக்காயாக உருட்டி தோற்கடிக்க சதி செய்கிறது இந்த மாயா மாஃபியா.

Also read: விசித்ரா மண்டையை கழுவும் மாயா.. என்ன உருட்டுனாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல

அதில் விஷ்ணுவை கவிழ்ப்பதற்காக பூர்ணிமாவை மாயா பயன்படுத்தியிருக்கிறார். அதைத்தான் நேற்று ஒரு லவ் கன்டென்ட் ஆக நாம் பார்த்தோம். ஏனென்றால் பூர்ணிமாவை பார்த்தாலே அமுல் பேபி விஷ்ணு கண்ணில் காதலும் வெட்கமும் போட்டி போட்டு வருகிறது. அதைத்தான் மாயா இப்போது ஆயுதமாக பயன்படுத்துகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பூர்ணிமாவிடம் சில வாரங்களுக்கு இதை அப்படியே கண்டினியூ செய்ய வேண்டும் என்று கூறுகிறார். முதலில் தயங்கினாலும் டைட்டிலை அடிக்க வேண்டும் என பூர்ணிமாவும் இந்த திட்டத்திற்கு சம்மதித்து வேலையை ஆரம்பித்து விட்டார்.

இதைத்தான் தற்போது ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள். மானத்தை வித்தாவது டைட்டிலையும் பணத்தையும் அடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள். இப்படி தந்திரத்துடன் செயல்படும் அவர்கள் இறுதியில் ஒருவருக்கொருவர் மோத நேரிட்டால் என்ன செய்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: சும்மா இருந்த சிங்கத்த சுரண்டி விட்ட நிக்சன்.. செம பல்பு கொடுத்த அர்ச்சனா

Trending News