திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024

அய்யோ! இவங்க அக்காவா! சோலி முடிஞ்சு.. கதற விட போகும் வைல்ட் கார்ட் போட்டியாளர்

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8ன் முதல் வாரத்தில் ரவீந்திரனும் 2வது வாரத்தில் அர்னவும் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 7 பெண்கள் 7 ஆண்கள் களத்தில் உள்ளனர். வழக்கம் போல ஆண்கள் டாஸ்க்கில் தோற்று போக, இந்த வாரமும் நாமினேஷன் free பாஸ் அவருக்கு கிட்டவில்லை.

இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற கேள்வியும் ஒருபுறம் இருக்கிறது. வைல்ட் கார்டு என்ட்ரி வேறு சீக்கிரமே வந்துவிடும். அதில், யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே துவங்கிவிட்டது. மற்ற சீசன்களை விட இந்த சீசனில் சுவாரஸ்யம் சற்று குறைந்தே இருக்கிறது.

அதனால் கண்டிப்பாக வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும். அதில் தரமான போட்டியாளரை இறக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறது பிக் பாஸ். அதற்காக சல்லடை போட்டு போட்டியாளரை தேடி கொண்டிருக்கு நிலையில் தான் ஒருவர் கண்ணில் பட்டுள்ளார்.

அய்யோ இவுங்களா.. பயங்கரமான ஆள் ஆச்சே..

ந்த நிலையில், இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் பிக் பாஸ் சீசன் 8ல் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளே போகப்போகும் வைல்ட் கார்டு என்ட்ரியில் இந்த நபர் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பின்னணி பாடகியும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக பங்கேற்ற நடிகை மாயாவின் அக்காவும் ஆன ஸ்வாகதா வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழையவுள்ளார் என்று கூறப்படுகிறது. மாயா பண்ண அளப்பறையில் இருந்தே, மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.. அதுக்குள்ளே இவங்க அக்கா வேறையா..

அவர்களாவது, நல்லபடியா இருப்பாங்களா.. இல்ல அவங்க மாயா விட டாக்ஸிக் ஆ என்று தற்போதே நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் இது அதிகாரபூர்வமாக அறிவிக்க படவில்லை என்றாலும், இவர் வர 90% வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -spot_img

Trending News