செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

சந்தியா ராகம் சீரியலில் ஜானகியுடன் சுமுகமாக போன ரகுராம்.. கார்த்திக்கை கண்டுபிடிக்க முயற்சி பண்ணும் மாயா

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ஒற்றுமையாக இருக்கும் ரகுராம் குடும்பத்தில் பிரச்சனையும் சிக்கல்களையும் உண்டாக்கி சந்தோஷத்தை இழக்க வைக்க வேண்டும் என்று புவனேஸ்வரி வெளியில் இருந்து பிளான் போடுகிறார். ஆனால் ரகுராம் வீட்டிற்குள் இருந்து கொண்டு பார்வதி மற்றும் பத்மா அந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் விரட்டிவிட்டு மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம் என்று தந்திரமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.

அதனால் தான் ஜானகியை ஜாமினில் எடுக்க வேண்டும் என்று நகையும் பணத்தையும் கேட்டதற்கு கொடுக்க மறுத்து விட்டார்கள். அத்துடன் ரகுராமிடம் அவங்களை வெளிய எடுக்கறதுக்கு நாம் ஏன் நகையை கொடுக்க வேண்டும். உனக்கு விருப்பமில்லாத விஷயத்தை நாங்கள் செய்ய மாட்டோம். அதனால் நகை தரமாட்டோம் என்று சொல்லிவிட்டோம் என ஏளனமாக சொல்கிறார்கள்.

இதே கேட்ட ரகுராம் பிளாஸ்பேக்கை யோசித்துப் பார்க்கும் அளவிற்கு கல்யாணம் முடிஞ்ச புதுசில் ஜானகிக்கு நகையை வாங்கிக் கொடுக்கிறார். நகையே பார்த்ததும் ஜானகி இந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். அப்படி இருக்கும் போது நான் மட்டும் புதிதாக போட்டால் சரியாக இருக்காது. அத்துடன் என்னைவிட இந்த நகை பத்மாவுக்கும் பார்வதிக்கும் கிடைக்க வேண்டும்.

அதனால் அவர்களை நான் கூப்பிடுகிறேன் நீங்களே கொடுக்கிற மாதிரி கொடுத்துடுங்க என்று சொல்லி ரகுராம் வாங்கிட்டு வந்த புது நகையை அவர்களிடம் கொடுத்து விடுகிறார். இதை யோசித்துப் பார்த்த ரகுராம் ஜானகியின் பெருந்தன்மைக்கு இவங்க ஒருபோதும் கால் தூசிக்கு வர மாட்டாங்க என்று முடிவு பண்ணி விட்டார்.

பிறகு மாயா, கதிர் மற்றும் சிவராமன் அனைவரும் சேர்ந்து வட்டிக்கு பணத்தை வாங்கலாம் என்று முடிவு பண்ணி வட்டிக் கொடுப்பவரிடம் போய் பேசுகிறார்கள். ஆனால் அவரையும் கொடுக்காத படி புவனேஸ்வரி போன் பண்ணி தடுத்து விடுகிறார். உடனே அவரும் இவ்ளோ பணம் என்னிடம் இப்போதைக்கு இல்லை என்று மறுத்துவிட்டார்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கோர்ட்டுக்கு போகும் மாயா பணம் இல்லை என்று லாயரிடம் சொல்கிறார். அதற்கு லாயர் இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்மளுடைய கேஸ் வந்துவிடும். அதற்குள் பணம் செலுத்தினால் தான் ஜாமினில் எடுக்க முடியும் என்று சொல்லியதால் அனைவரும் டென்ஷனாக என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது அந்த நேரத்தில் மாஸ் என்டரி கொடுக்கும் விதமாக ரகுராம் வந்து லாயரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து விடுகிறார். பிறகு ஜாமினில் வெளிவந்த ஜானகி ரகுராமுடன் ஹோட்டலுக்கு போகிறார். அங்கே இருவரும் சந்தோஷமாக பேசி பழைய விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்ற உண்மையை நிரூபிக்கும் விதமாக மாயா போராடுகிறார். எப்படியும் கார்த்திக் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்று கண்டுபிடித்து புவனேஸ்வரி தோற்கடித்து ரகுராம் குடும்பத்தை காப்பாற்றி விடுவார்.

Trending News