Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், கார்த்திகை எங்கே தேடியும் காணவில்லை என்பதால் புவனேஸ்வரி, கதிர் மீது புகார் கொடுத்திருந்தார். அதன்படி ரகுராம் வீட்டிற்கு வந்த போலீஸ் கதிர் மீது சந்தேகம் இருப்பதால் விசாரணைக்கு கூட்டிட்டு போகிறோம் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள்.
ஆனால் அங்கே விசாரணை என்கிற பெயரில் கதிரை அடித்து துன்புறுத்தி கார்த்திக் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் கதிருக்கு கார்த்திக் பற்றி எந்தவித தகவலும் தெரியாததால் என்ன சொல்வது என்று தெரியாமல் சித்திரவதை அனுபவிக்கிறார். ஜெயிலுக்கு வந்து கதிரை சந்தித்த மாயா, உன்னை ஜாமினில் நான் வெளியே கூட்டிட்டு வந்து விடுகிறேன் என்று கிளம்பி விடுகிறார்.
அந்த வகையில் கதிரை ஜாமீன் எடுக்க வேண்டும் என்றால் அதற்கான பணம் தேவைப்படுகிறது என்பதால் ஜானகி அவருடைய நகை எல்லாத்தையும் கழட்டி மாயவிடம் கொடுக்கிறார். மாயவும் அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி கதிரை ஜாமினில் இருந்து வெளியே கூட்டிட்டு வந்து விடுகிறார்.
ஜானகியின் செயலால் ரகுராம் உச்சகட்ட கோபத்திற்கு போய் விடுகிறார். உனக்கு புருஷன் சொன்னதை விட கதிரை வெளியில் கூட்டிட்டு வரவேண்டும் என்பதுதான் ரொம்ப முக்கியமா போயிட்டா என்று கோபப்படும் அளவிற்கு ஜானகிடம் சண்டை போட்டு விட்டார். ஜானகி என்ன சொல்ல வருகிறார் என்று கூட காது கொடுத்து கேட்காமல் ரகுராம் பிடிவாதமாக வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டார்.
பிறகு கதிர் காயத்துடன் வீட்டிற்கு வந்த நிலையில் எதுவும் பண்ண முடியாமல் அவஸ்தைபடுகிறார். கதிரின் அவஸ்தையை பார்த்த தனம், கதிரின் காயத்துக்கு மருந்து போட்டு கூடவே இருந்து எல்லா பணிவிடையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறார். ஆனால் பார்க்கும் பொழுது உன் மீது பரிதாபத்தினால் நான் எதுவும் பண்ணவில்லை.
நீ என்னை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் போய் விடுவாய் என்று சொன்னாய். அதற்காக நான் எல்லாம் பண்ணுகிறேன் அவ்வளவு தான் என்று சொல்லி கதிரின் காயத்துக்கு மருந்து போடுகிறார். ஆனால் இன்னும் ஒரு மாதம் இருக்கும் பட்சத்தில் கதிர் மீது தனத்துக்கு நல்ல அபிப்ராயம் வந்துவிடும்.
அத்துடன் கார்த்திக் மோசமானவர் நம்முடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தான் கதிர் தாலி கட்டியிருக்கிறார் என்ற உண்மையும் தெரிந்த நிலையில் தனத்துக்கு கதிர் மீது காதலும் வந்துவிடும். ஆனால் கார்த்திக்கு இனி வரவே மாட்டார் உயிரோடு இல்லை என்ற விஷயம் புவனேஸ்வரிக்கு தெரிந்தால் பிரச்சினை பெருசாக வெடிக்கும். அத்துடன் லிங்கம் வைத்திருக்கும் ஆதாரத்தை வைத்து மாயாவை மிரட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.