திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரதீப்புக்கு ரெக்கார்ட் கொடுக்க மாயாக்கு என்ன தகுதி இருக்கு.? 6 வருடங்களுக்கு முன்பே இருந்த தகாத உறவு

Pradeep-Maya: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் முதலில் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் கடந்த வாரம் பரபரப்பை கிளப்பியது. ரசிகர்கள் பிரதீப்புக்கு பேர் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் திடீரென ரெட் கார்ட் கொடுத்து அவரை வெளியேற்றி விட்டனர். இதனால் நெட்டிசன்கள் கமலை சமூக வலைத்தளங்களில் மிகவும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

மேலும் கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களும் பிரதீப்புக்கு ஆதரவாக தான் பதிவு போட்டு வருகிறார்கள். இந்த சூழலில் பிரதீப் ரெட் கார்ட் கொடுப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தது மாயா. விக்ரம் படத்தில் ஹஸ்கி வாய்ஸில் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாயா.

மேலும் தற்போது விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு நல்ல பெயர் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொத்தமாக பெயரை கெடுத்துக் கொண்டார். அதிலும் பிரதீப் மீது பழி போட்டு வெளியே அனுப்பி இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஆறு வருடத்திற்கு முன்பு மாயா மீது விழுந்த பழியை இப்போது ரசிகர்கள் துலாவி ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்.

Also Read : பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. விஷப்பாட்டிலை களையெடுக்க வேண்டியதுதான், வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆடை படத்தில் நடித்த அனன்யா ராம் பிரசாந்த் மாயா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்து இருந்துள்ளார். அதாவது அனன்யாவுக்கு 18 வயது இருக்கும்போது மாயாவை சந்தித்து இருக்கிறார். அப்போது தன்னிடம் தவறாக நடந்து கொள்ள மாயா முற்பட்டார் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

ஒரு பெண்ணிடமே இவ்வாறு தகாத உறவு வைத்துக்கொள்ள முற்பட்டதாக மாயா மீது புகார் எழுந்துள்ள நிலையில் இவர் பிரதீப் மீது எவ்வாறு குற்றம் சுமத்தி இருக்கிறார் என்ற சர்ச்சை தான் இப்போது இணையத்தில் வெடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நெட்டிசன்கள் மாயாவை விளாசி வருகிறார்கள்.

ஆனால் அப்போதே மாயா அனன்யா கூறியது பொய்யான தகவல் என்று கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அனன்யா மீதும் புகார் கொடுப்பேன் என்று சர்ச்சையை கிளப்பி இருந்தார். இந்த சூழலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு இப்போது மாயாவின் வண்டவாளம் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

Also Read : அவ பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு இருக்கான்.. பிரதீப்பை விட கேவலமா பண்றது உங்க கண்ணுக்கு தெரிலயா பிக்பாஸ்

Trending News