வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

வெட்ட வெளிச்சமான ஐஸ்வர்யாராயின் வாழ்க்கை.. உலக அழகின்னாலும் இதுதான் நிலைமை போல

Aishwarya Rai divorce: மனசுல பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் என நெனப்பு, அவ என்ன பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராயா, விட்டு தள்ளுடா இது போன்ற பல வசனங்களை கேட்டு நாம் வளர்ந்திருப்போம்.

என்னதான் ஐஸ்வர்யா ராய் தமிழ் படங்களில் பெரும்பாலும் நடிக்கவில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர் பெயரை சொல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். இதனாலேயே அவர் நம் மனதில் ஆழ பதிந்து விட்டார்.

அதிலும் ஜீன்ஸ் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்படி ஒரு அழகு தேவதை ஆக இருப்பார். இவருக்கும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அனிதா பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆன நாளிலிருந்து இவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும். மீடியா முன்பே அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் கலங்கும் அளவுக்கு நிறைய விஷயங்களை செய்திருப்பார்.

எப்படி பார்த்தாலும் இருவரது தரப்பிலிருந்தும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் காட்டப்பட்டது. ஆனால் அம்பானி வீட்டு கல்யாணத்தில் அந்தப் போலி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா அம்மா மற்றும் சகோதரி குடும்பத்துடன் திருமணத்திற்கு வந்திருந்தார்.

எல்லோரும் ஒன்றாக போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள். அது நடந்து ஒரு சில நொடிகளிலேயே ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆரத்யாவுடன் வந்திருந்தார். சரி ஒரு வேலை இருவரும் லேட்டாக வந்திருப்பார்கள் போல என்று கூட மனதை சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் எல்லோருமே ஜோடி ஜோடியாக, குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போதும் கூட ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் வந்து நிற்கவில்லை. இதிலிருந்து இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது.

இது என்ன புது புரளியா இருக்கு

பல மீடியாக்களும் இவர்களுடைய உறவு முறிவுக்கு காரணம் ஜெயா பச்சனின் திமிரான நடவடிக்கை தான் என்று சொல்கிறார்கள். ஐஸ்வர்யா தன்னைவிட புகழ் மற்றும் பெயரில் ஒரு படி மேலே இருப்பது தான் அபிஷேக் பச்சன் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டது.

நாளுக்கு நாள் வளர்ந்து தற்போது பிரிவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இந்த விவாகரத்து சர்ச்சையோடு சேர்ந்து ஐஸ்வர்யா ராய் அடுத்து சல்மான் கானுடன் இணைய இருக்கிறார் என்ற வதந்தியையும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் இணைந்தது போல் நிறைய போட்டோக்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில விஷமிகள். எது எப்படியோ ஐஸ்வர்யா ராய் அழகையும் தாண்டி ரொம்பவும் புத்திசாலியானவர். மீண்டும் சல்மான் கான் உடன் அவர் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என அவருடைய ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News