புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ பயன்கள்.. பெண்களின் வரப்பிரசாதம்

Medicinal benefits of banana flower: இயற்கையாக வந்த அத்தனை விஷயங்களும் ரொம்பவே அற்புதமானது. அதிலும் பூ என்று என்று சொல்லக்கூடியது இயற்கையின் படைப்பில் மிகவும் முக்கியமானது. அந்தப் பூவை கடவுளுக்கு படைத்து அழகு பார்க்கவும் செய்வார்கள், பெண்கள் தலையில் சூடி கொள்வதால் அவர்களுடைய அழகை மெருகேற்றும் வகையில் மிகவும் அற்புதமானது.

இதையெல்லாம் தாண்டி அந்தப் பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகவும், உயிரைக் காக்கும் கவசமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவ குணங்களை கொண்ட பூவாக வாழைப்பூ இடம் பிடித்திருக்கிறது.

வாழைப்பூவின் மருத்துவ பயன்கள்:

அப்படிப்பட்ட இந்த வாழைப்பூவில் எத்தனை மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்தும் அதை அசால்டாக விட்டு விடுகிறோம். அதன்பிறகு பணத்தை கணக்கில்லாமல் மருத்துவர்களிடம் வாரி இறைத்து ஒவ்வொரு நோயாளையும் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருகிறோம். இதற்கு பேசாமல் அந்த மகத்துவமான வாழைப்பூவின் அற்புதத்தை தெரிந்து கொண்டு அதன் நன்மைகளை பயன்படுத்தினால் வரக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நாம் விலகிக் கொள்ளலாம்.

வாழைப்பூவின் மருத்துவ பயன்கள்: இன்றைய காலத்தில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பாதிக்கப்பட்டு நிற்பது சர்க்கரை நோயால். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த நோய் வராமல் தடுக்க முடியாது. ஆனால் அதற்கு இயற்கையோடு ஒன்றிப்போன வாழைப்பூவை சாப்பிட்டால் நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில் வாழைப்பூ பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்யும். இதனால் சர்க்கரை நோய் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

அதேபோல் இப்பொழுது அதிகமாக நாம் வெளியே சாப்பிடும் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறோம். இதனால் அஜீரணக் கோளாறால் பாதிக்கப்பட்டு வயிற்றுக்கடுப்பு போன்ற பல பிரச்சனைகளில் அவஸ்தை படுகிறோம். அந்த சமயத்தில் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சிறிதளவு சீரகம், மிளகு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

அதே மாதிரி இந்த வாழைப்பூ பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக காணப்படுகிறது. கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படும் பொழுது வாழைப்பூவில் இருக்கும் வெண்மையான பாகத்தை நசுக்கி சாறு பிழிந்து மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் இரத்தப்போக்கு சீராக இருக்கும். அதோடு உடல் அசதி, வயிற்று வலி, அனைத்தும் குறைந்து விடும்.

இதே போல் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு மிகப்பெரிய பிரச்சினை வெள்ளைப்படுதல். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பல பிரச்சினைகளில் சிக்கி தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த வாழைப்பூவே ரசம் செய்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதலுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைந்து விடும். அத்துடன் வாழைப்பூ ரசம் வறட்டு இருமலையும் மறைத்து விடும். அத்துடன் உடல் சூட்டை தணிக்கும், மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

மேலும் கல்யாணமான சில பெண்கள் குழந்தையின்மையால் மனவேதனையில் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அவர்கள் அடிக்கடி இதை உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேரு கிடைக்கும். அதனால் தான் ஒரு பழமொழி உண்டு வாழையடி வாழையாக வாழ வேண்டும். நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்க செய்யும் வாழைப்பூவில் இருக்கும் அதிசயமோ எண்ணற்றது என்று.

உடலை சீராக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்

Trending News