புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொழுந்தனை பார்த்து மன்னிப்பு கேட்கும் மீனா.. கதிரை கடையிலிருந்து துரத்தி அடித்த பாண்டியன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் குடும்பத்தில் இருப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கதை அமைந்து வருகிறது. அந்த வகையில் அப்பா மனதை கஷ்டப்படுத்தவும் கூடாது, அவர் சொல்வது தான் தாரக மந்திரம் என்று மகன்கள் இருப்பது போல் காட்டப்படுகிறது. இதற்கிடையில் செந்திலுக்கு மீனா மீது ஏற்பட்ட காதல் கல்யாணத்தால் பாண்டியன் வீடு பூகம்பமாக வெடித்திருக்கிறது.

இதற்கு காரணமாக இருந்த கடைசி மகன் கதிரை பாண்டியன் வீட்டிற்குள் வரக்கூடாது என்று வெளியே அனுப்பி விடுகிறார். இதற்கிடையில் எப்படியாவது வீட்டில் இருப்பவர்களின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விட வேண்டும் என்று செந்தில் மீனா பிளான் பண்ணுகிறார்கள். அதற்கேற்ற மாதிரி மீனா, மாமனார் மாமியாரிடம் பேச ஆரம்பிக்கிறார்.

அதிலும் மீனாவை பார்த்தாலே பாண்டியன் ஏதோ விரோதியை பார்ப்பது போல் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். அடுத்ததாக மீனா வேலைக்கு போகிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்புகிறார். அப்பொழுது நம்மளால தான் கொழுந்தன் வீட்டை விட்டு வெளியே போய்விட்டார் என்ற குற்ற உணர்ச்சியில் கதிரை போய் பார்க்கிறார்.

Also read: ரொமான்ஸில் புகுந்த மகேஷ் ஆனந்தி.. தவிக்கும் அன்பு, யார் காதல் கை கூட போகுது?

அதற்கு கதிர் இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல அண்ணி. நீங்களும் எங்க அண்ணனும் சந்தோஷமாக இருந்தாலே எனக்கு அது போதும் என்று சொல்கிறார். இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு செந்தில் வந்து விடுகிறார். இவரை பார்த்த பாண்டியன் எதுவும் சொல்லாமல் வாயை மூடிட்டு வேலை பார்க்க ஆரம்பிக்கிறார்.

அதே மாதிரி கதிரும் கடைக்கு வேலை பார்ப்பதற்காக வருகிறார். ஆனால் பாண்டியன் கதிரை பார்த்ததும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கத்த ஆரம்பிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் என் மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்லியும் கடைக்கு ஏன் வந்தாய் என்று திட்டி வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் காலேஜுக்கும் போக முடியாமல் கடைக்கும் வர முடியாமல் தன்னந்தனியாக தவித்து வருகிறார் கதிர்.

கூடிய விரைவில் மாமனார் மாமியார் மனசை மாற்றி கதிரையும் வீட்டிற்குள் கூட்டி வந்து விடுவார் மீனா. அதற்கேற்ற துடிப்பும் நம்பிக்கையுடனும் மீனா ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப் போகிறார். இதற்கு அடுத்தாவது பாண்டியன் வீட்டில் உள்ள பிள்ளைகள் மனதில் பட்ட விஷயங்களை தைரியமாகவும் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: ஈஸ்வரிக்கு பக்க பலமாக இருக்கும் ஜீவானந்தம்.. குணசேகரன் மூஞ்சில் கரியை பூச சூழ்ச்சியில் இறங்கிய தோழர்

Trending News