Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டை சுற்றி சிசிடிவி கேமராவை வைப்பதற்காக வீட்டிற்கு ஆட்களை வர சொல்லி இருக்கிறார். இந்த சமயத்தில் கோமதி, பசங்களின் கை செலவுக்கு பணம் கொடுத்தால் கொஞ்சம் நல்லா இருக்கும். அவங்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது, பொண்டாட்டிகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு ஆசை இருக்கும்.
அந்த சமயத்தில் உங்களிடம் வந்து கேட்டுக் கொண்டிருக்க முடியாது, அதனால் சரவணன் மற்றும் செந்திலுக்கு கொஞ்சம் பணம் கொடுங்க என்று பாண்டியனிடம் கோமதி சொல்கிறார். இதை கேட்டதும் பாண்டியன், செந்தில் படம் கேட்க சொல்லி உன்னிடம் ஏதாவது சொன்னானா என்று கேட்கிறார். அதற்கு கோமதி அவன் எதுவுமே சொல்லலை நானா தான் சொல்கிறேன் என்று சொல்கிறார்.
உடனே பாண்டியன், அப்படி பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டால் பணத்தின் அருமை தெரியாமல் போய்விடும். பிறகு ஊதாரித்தனமாக செலவு செய்து தேவையில்லாத கெட்ட பழக்கத்துக்கு ஆளாகி விடுவார்கள். அவர்களுக்கு எப்பொழுது என்ன செய்யணும் என்று நல்லாவே எனக்கு தெரியும். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கேன்.
இதெல்லாம் உனக்கு தெரிந்தும் நீ இப்படி கேட்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி கோமதி வாயை பாண்டியன் அடைத்து விடுகிறார். பிறகு சிசிடிவி கேமரா வைப்பதற்கு 32,000 செலவாகும் என்று சொல்லிய நிலையில் பாண்டியன் வைப்பதற்கு சம்மதம் தெரிவித்து விடுகிறார். அடுத்ததாக புறம்போக்கு நிலத்தில் கடை வைத்திருப்பதற்காக நோட்டீஸ் அனுப்பியது விசாரிக்கும் விதமாக குமரவேலு மற்றும் சக்திவேல் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு போகிறார்கள்.
அங்கே ஆக்கிரமிப்பு இல்லாத நிலத்தை விசாரிக்கும் பொறுப்பில் மீனா இருக்கிறார். மீனாவை சந்தித்த குமரவேலு மற்றும் சக்திவேல் யாருன்னு தெரியாமல் நீ என்னுடன் மோத ஆரம்பித்து விட்டாய். தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக இந்த மாதிரி வேலையை பார்க்கிறாய் என்று சக்திவேல், மீனாவை குற்றம் சாட்டுகிறார். ஆனால் மீனா, என்னுடைய வேலை தான் நான் பார்க்கிறேன்.
உங்களுக்கு அந்த நோட்டீஸ்க்கு என்ன பண்ணனும் அதை பண்ணுங்க, அதை விட்டு தேவையில்லாமல் இங்க வந்து கத்துற வேலையை வச்சுக்காதீங்க என்று சொல்லி விட்டார். அந்த வகையில் இனி மீனாவுடன் ராஜி குடும்பத்தில் உள்ள முத்துவேலு, சக்திவேலு மற்றும் குமரவேலு மோத போகிறார்கள். இதனால் தேவையில்லாத பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருக்கிறது.
அடுத்ததாக செந்தில் மற்றும் பழனிச்சாமி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த பாண்டியன், செந்திலை நக்கலாக பேசி உன் செலவுக்கு பணம் வச்சுக்கோ என்று நூறு ரூபாயை கொடுக்கிறார். பிறகு பாண்டியன் பேசியதை தாங்க முடியாத செந்தில், பாண்டியன் கடையிலிருந்து கிளம்பியதும் கல்லாப்பெட்டியில் இருந்து 500 ரூபாயை எடுத்து விடுகிறார்.
இதைப் பார்த்த பழனிச்சாமி உங்க அப்பாக்கு தெரிந்தால் தேவையில்லாமல் பிரச்சினையாகும் என்று சொல்கிறார். அதற்கு செந்தில் கணக்கு நோட்டில் வியாபாரமான 800 ரூபாய் கணக்கை 300 ரூபாய் என்று மாற்றி 500 ரூபாய் ஆட்டையை போட்டு விட்டார்.
இதைப் பார்த்த பழனிச்சாமி, நல்லா இருக்க பிள்ளைகள் கெட்டுப் போவதும் பெற்றோர்களால் தான், பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பதும் பெற்றோர்கள் தான் என்று புலம்பிக்கொள்கிறார். ஆனால் இந்த விஷயம் பாண்டியன் மற்றும் மீனாவிற்கு தெரிந்தால் நிச்சயம் செந்திலை தவறாக தான் நினைப்பார்கள். இதற்கு பேசாமல் சரவணன் மற்றும் கதிர் மாதிரி வேற எங்கேயாவது வேலையில் சேர்ந்து சம்பாதித்தால் செந்தில் இஷ்டப்படி சந்தோஷமாக இருந்திருக்கலாம்.