பாண்டியனை ஏமாற்றும் மீனா, குட் நியூஸ் சொன்ன ராஜி.. குமரவேலுவை வெளுத்து வாங்கிய அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இன்கம் டேக்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணி தகவலை கொடுத்தது அரசி தான் என்று தவறாக குமரவேலு புரிந்து கொண்டார். இதனால் அரசியை அடித்து துன்புறுத்தும் அளவிற்கு துணிந்து விட்டார். ஆனால் அரசி அடி வாங்கக் கூடிய ஆள் இல்ல, ஒன்றுக்கு திருப்பி 10 ஆக கொடுக்கக்கூடிய ஆளு.

அதனால் குமரவேலுவை வெளுத்து வாங்கும் அளவிற்கு அடித்து கழுத்தை பிடித்து விட்டார். இதனால் வலி தாங்க முடியாத குமரவேலு கத்திய நிலையில் வீட்டுக்குள் இருந்த அனைவரும் வந்துவிடுகிறார்கள். வந்ததும் என்னாச்சு என்று கேட்ட நிலையில் அரசி, பணம் போன கோபத்தில் உங்க பையன் என்னை போட்டு அடிக்கிறார் என்று குமார் மீது பழியை தூக்கி போட்டு விடுகிறார்.

உடனே அங்கு வந்தவர்கள் அனைவரும் குமாரை திட்டிவிட்டு அரசியை கூட்டிட்டு போய் விடுகிறார்கள். அடுத்ததாக பணம் விஷயத்தில் செந்தில் தவறு செய்து இருந்தாலும் அதை மீனா தட்டிக் கேட்டும் பிரயோஜனம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு விஷயத்தை கமுக்கமாக மறைத்து விட்டார். மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்து நியாயம் தர்மம் பேசும் மீனா, செந்தில் செய்த தவறையும் பாண்டியனிடம் சொல்லி இருக்க வேண்டும்.

ஆனால் பாண்டியனிடம் சொல்லாமல் மறைத்து பாண்டியனே ஏமாற்றும் அளவிற்கு செந்திலுடன் மீனா, கமுக்கமாக நிற்கிறார். இதனால் பாண்டியனுக்கு விஷயம் தெரிய வரும் பொழுது மீனா மற்றும் செந்தில் மீது தவறான கருத்துக்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக அரசி ராஜி மற்றும் கதிருக்கு ரிசல்ட் வரப்போகிறது. இதனால் பயத்தில் கதிர் விடிய விடிய தூங்காமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பிறகு ராஜி தான் ஆறுதல் பற்றி தூங்க வைத்தார். அந்த வகையில் ராஜி வீட்டில் இருப்பவர்களுக்கு சொன்ன குட் நியூஸ் என்னவென்றால் எக்ஸாமில் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணி விட்டார். அதே மாதிரி அரசியும் பாஸ் பண்ணி விட்டார். ஆனால் கதிர் தான் பாஸ் பண்ணவில்லை. 4 பாடத்தில் அரியர் வந்திருக்கிறது என்று சொல்கிறார். இதனால் வழக்கம்போல் கதிர் பாண்டியனிடம் திட்டு வாங்குகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →