வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜயாவுக்கு சாப்பாடு மூலம் ஆப்பு வைத்த மீனா.. போட்டுக் கொடுத்த மாமனார், சகுனி வேலை பார்க்கும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா தன் மருமகள் என்பதையே மறந்து அந்த வீட்டில் முழு நேர வேலைக்காரியாகவே பணிபுரிந்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி மாமியார் மற்றும் மாமனாருக்கு செய்யும் வேலைகளையும் தாண்டி அந்த வீட்டில் வாக்கப்பட்டு வந்த அனைவருக்கும் எடுபிடி வேலை பார்க்கும் சம்பளம் இல்லா வேலைக்காரியாக தான் நடந்து கொள்கிறார்.

இதனால் தான் விஜயா மற்றும் ரோகினி ஓவராக ஆட்டம் போட்டு மீனா மற்றும் முத்துவை மட்டம் தட்டி பேசுகிறார்கள். அதிலும் விஜயாவின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. அப்படி தான் தற்பொழுது நான் டான்ஸ் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். எனக்கு மதியம் சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடு என்று மீனாவிடம் ஆர்டர் போட்டு போகிறார்.

சூடு சொரணை இல்லாமல் திரியும் விஜயாவின் மருமகள்

இந்த மீனாவும் அத்தை மீது பரிதாபப்பட்டு வகை வகையாக சமைத்துக் கொண்டு சாப்பாடு எடுத்துப் போகிறார். ஆனால் போகும்பொழுது பசியில் வாடி இருக்கும் முதியவர்களை பார்த்ததும் மீனா மனசு தாங்க முடியவில்லை. அதனால் மாமியாருக்கு எடுத்துட்டு போன சாப்பாட்டை அந்த முதியவர்களுக்கு கொடுத்து சாப்பிட வைத்து விட்டார்.

ஆனால் மாமியாருக்கு எடுத்துட்டு போகணுமே அதுக்கு என்ன பண்ணனும் என்று யோசித்த மீனா, கடையிலிருந்து பிரியாணி வாங்கிட்டு போனால் மாமியார் வாயை அடைத்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார். அதன்படி பிரியாணி வாங்கிட்டு விஜயா மற்றும் தோழி பார்வதிக்கு கொடுத்துவிட்டு வருகிறார். பிரியாணி என்றதும் விஜயாவும் எந்த கேள்வியும் கேட்காமல் நல்லா சாப்பிட்டு விட்டார்.

ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு அது ஜீரணம் ஆகாமல் அவஸ்தை பட்டுக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த அண்ணாமலை, மீனாதான் உனக்கு வகை வகையாக வீட்டில் சமைத்து கொண்டு வந்தாளா, அதை சாப்பிடாமல் உன்னை யாரு பிரியாணி சாப்பிட சொன்னா என்று போட்டுக் கொடுத்து விட்டார். உடனே விஜயா, மீனாவை பார்த்து முறைக்கிறார்.

பிறகு நடந்த விஷயத்தை மீனா சொல்ல அதற்கு வழக்கம் போல் விஜயா திட்டி தீர்க்க போகிறார். இதுதான் சான்ஸ் என்று கிடைத்த கேப்பில் கிடா வெட்டும் விதமாக ரோகிணி, வர வர மீனாக்கு உங்க மேல பயமில்லாமல் போய்விட்டது. இப்படியே போனால் நீங்க டம்மி ஆகி விடுவீர்கள். அதனால் இப்பொழுதே மீனாவுக்கு சரியான ஒரு பாடத்தை கற்றுக் கொடுங்கள் என்று சகுனி வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்.

உடனே விஜயாவும், மீனாவை வீட்டை விட்டு அனுப்புவதற்கு மறுபடியும் ரோகிணி மூலம் பிளான் பண்ணி தில்லாலங்கடி வேலையை பார்க்கப் போகிறார். ஆனால் என்ன நடந்தாலும் நாங்கள் இந்த வீட்டை விட்டு போக மாட்டோம் என்று சூடு சொரணை இல்லாமல் அந்த வீட்டிலேயே தான் மீனா மற்றும் முத்து வாழ போகிறார்கள். இதனால் கடைசி வரை இவர்களும் மாறுவதில்லை ரோகிணியும் மாட்டப் போவதில்லை.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News