புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அதிகாரம் பண்ணிய மனோஜை வெளுத்து வாங்க போகும் மீனா.. விஜயா ஆடிய ஆட்டத்திற்கு கொடுக்கும் பதிலடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தனக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் பொழுது கூட ரவி லீவு போட்டு பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளவில்லை என்ற கோபத்தில் சுருதி வீட்டை விட்டு வெளியேறி அம்மா வீட்டுக்கு போய் விடுகிறார். இந்த விஷயத்தை தெரிந்த விஜயா, ரவிக்கு போன் பண்ணி உன் பொண்டாட்டி ரொம்ப ஓவராக போகிறார்.

அவள் பின்னாடியே போய் கெஞ்சாத, நீ போய் கூப்பிட வேண்டாம். நீ இல்லாம அவளால் வாழ முடியாது, அவளே தேடி வரட்டும் என்று விஜயா, ரவிக்கு போன் பண்ணி பேசுகிறார். இதைக் கேட்ட மீனா, அத்தை ஏன் ரவியிடம் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று முத்துவிடம் கேட்கிறார். அதற்கு முத்து என்னதான் சுருதி பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் அம்மாவுக்கு மதிப்பு கொடுக்காமல் கரராக பேசுவதால் அம்மாவுக்கு சுருதி பிடிக்காமல் போய்விட்டார்.

மீனாவிடம் அதிகாரமாக பேசி அவமானப்படுத்திய மனோஜ்

அதனால் தான் ரவியிடம் அம்மா இந்த மாதிரி பேசுகிறார் என்று முத்து, மீனாவிடம் சொல்கிறார். உடனே மீனா, ரவிக்கு போன் பண்ணி உங்க மேல தான் தப்பு இருக்கிறது. சுருதிக்கு உடம்பு சரியில்லை என்றால் நீங்கள் ஆபீஸ் லீவ் போட்டு பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு உடம்பு சரியில்லைன்னா உங்க அண்ணன் அதுதானே செய்கிறார்.

என்னதான் பக்கத்தில் மற்றவர்கள் இருந்தாலும் புருஷன் பொண்டாட்டிக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் ஆறுதலாக நீங்கள் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதனால் நீங்க பண்ணது தவறுதான், அதற்காக சுருதியிடம் பேசி சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வாங்க என்று சொல்கிறார். இதை கேட்டு முத்து, இந்த இடத்தில் இருந்து எங்க அம்மா பேச வேண்டியது அனைத்தையும் நீ பேசி குடும்பத்தின் ஒற்றுமைக்காக யோசிக்கிறாய் என்று பாராட்டுகிறார்.

இதனை அடுத்து முத்து சவாரிக்கு போய் விடுகிறார். மீனாவும் பூக்கட்டுவதற்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது மீனாவின் சொந்தக்காரர்கள் பத்திரிக்கை கொடுக்க வருகிறார்கள். மீனா அதை வாங்கியதும் அவர்களை சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். உடனே முத்துவுக்கு போன் பண்ணி சொந்தக்காரங்க வந்து இருக்காங்க நீங்க வரிங்களா என்று கேட்கிறார்.

அதற்கு முத்து நான் சவாரி போய்க் கொண்டிருக்கிறேன். நீ அவர்கள் பக்கத்தில் இருந்து தேவையானதை பார்த்து சமைத்துக் கொடு என்று சொல்கிறார். அதன்படி மீனாவும் சமைத்துவிட்டு அவர்களை சாப்பிட வைப்பதற்கு டைனிங் டேபிள் உட்கார்ந்து பரிமாறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா வந்ததும் இவர்களை பார்த்து அவமானப்படுத்தும் விதமாக பேசி விடுகிறார்.

இதனால் கோபப்பட்ட மீனாவின் சொந்தக்காரர்கள் சாப்பிடாமல் அப்படியே போய் விடுகிறார்கள். உடனே மீனாவும் பூ கட்டுவதற்கு கிளம்பி விடுகிறார். அங்கே நடந்த விஷயத்தை பற்றி மீனா சொல்லும் பொழுது பக்கத்தில் இருப்பவர்கள் நீ உடனே உன் மாமியாருக்கு பதிலடி கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும் பொறுமையாக இருந்தால் இப்படி தான் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்று சொல்கிறார்கள்.

இதனை அடுத்து விஜயா, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மனோஜ் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது மனோஜ்க்கு ஜலதோஷம் பிடித்திருப்பதால் வீட்டிற்கு வந்த மீனாவிடம் விஜயா, மனோஜ்க்கு ஜலதோஷம் பிடிச்சிருக்கு நீ நண்டு வாங்கிட்டு வந்து ரசம் வச்சு கொடு என்று அதிகாரமாக சொல்கிறார். அதற்கு மீனா நான் ஏன் வச்சு கொடுக்கணும், மனோஜ்க்கு ஏதாவது ஒன்னுனா அவங்க மனைவியை பண்ண சொல்லுங்க, என்னால பண்ண முடியாது என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட விஜயா கோபப்படும் நிலையில் மனோஜ் ரொம்பவே அதிகாரம் பண்ணும் விதமாக உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எங்க அம்மாவையே எதிர்த்து பேசுவாய். ஒழுங்கு மரியாதையாக அவர்கள் சொன்னபடி எனக்கு நண்டு ரசம் வச்சு கொடு என்று அதிகாரம் பண்ணி மீனாவை அவமானப்படுத்துகிறார். இப்படி விஜயா மற்றும் மனோஜ் இருவரும் சேர்ந்து மீனாவிற்கு ஆர்டர் போடுகிறார்கள்.

இதை கேட்டதும் மீனா ரூம்குள் போயிட்டு முத்துவின் பெல்ட்டை எடுத்து வந்து இவர்களை முறைத்துப் பார்க்கிறார். அந்த வகையில் மனோஜ்க்கு இது ஒரு தக்க பாடமாக இருக்கும் என்பதற்கு ஏற்ப மீனா அந்த பெல்ட்டை வைத்து மனோஜை வெளுத்து வாங்கப் போகிறார் என்பது போல் தெரிகிறது. அதே மாதிரி விஜயா ஆடிய ஆட்டத்திற்கும் மீனா கொடுக்கும் பதிலடியாக நாளை தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

வாயை மூடிக்கொண்டு பொறுமையாக இருந்தால் எல்லோரும் தலைக்கு மேல் ஏறி இப்படித்தான் ஆடுவார்கள் என்பதற்கு விஜயா மற்றும் மனோஜ் சிறந்த உதாரணம். ஆனால் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது அதிரடியாக இறங்க வேண்டும் என்று மீனா எடுக்கப் போகும் முடிவு நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

Trending News