ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜயாவை அடிச்சு குடும்பத்தை காப்பாற்ற போகும் மீனா.. மனோஜ்க்கு வச்ச சூனியத்தால் அரண்டு போன ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி மாட்டிக்க கூடாது தடையுமே இல்லாமல் ஆதாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக முத்துவின் போனை கடலில் தூக்கி எறிய சொல்லிவிட்டார். அதற்காக வித்யா, முத்துவின் போனை எடுத்துட்டு போகும்பொழுது செருப்பு தைக்கும் கடையில் விட்டு விட்டார்.

பிறகு ரோகிணி, வித்தியாவுக்கு போன் பண்ணி போனை பற்றி கேட்கிறார். அப்பொழுது வித்யா போன் எங்கே போச்சு என்று தேடிப் பார்க்கிறார். ஆனால் காணவில்லை என்று சொன்னால் ரோகிணி பத்ரகாளி மாதிரி ஆடி விடுவார் என்பதால் போனை கடலில் போட்டு விட்டேன் என்று பொய் சொல்லிவிட்டார். அடுத்ததாக ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூம் இல் சூனியம் பண்ணின முட்டை வைக்கப்பட்டு இருக்கிறது.

அதைப் பார்த்து பயந்து போன மனோஜ் ரோகிணி அங்கு வந்து நண்பரிடம் உதவி கேட்கிறார். உடனே அவர் ஜோசியரை பார்த்து சரி செய்யலாம் என்று ரோகினி மற்றும் மனோஜை கூட்டிட்டு போகிறார். அங்கே போனதும் இது சூனியம் வைத்த முட்டை இதற்கு பரிகாரம் பண்ண வேண்டும் என்றால் கோவிலில் நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து பூச்சட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.

அதன்படி மனோஜும் சரி என்று சொல்லி வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக முத்து குளிக்க போகும் பொழுது மோட்டர் பிரச்சினை செய்வதால் மெயின் சுச்சியை ஆப் பண்ணிட்டு சரி பண்ண போகிறார். ஆனால் அது தெரியாமல் கரண்ட் இல்லை என்று மனோஜ் சுச்சியை ஆன் பண்ணி விட்டார். பிறகு விஜயா பேன் படும் பொழுது கரண்ட் ஷாக் அடித்து விடுகிறது.

அங்கே விஜயாவை பார்க்க வந்த பார்வதி, விஜயா கையை பிடித்ததும் பார்வதிக்கும் ஷாக் அடித்து விட்டது. அடுத்ததாக ரோகிணி மனோஜ், ரவி மற்றும் சுருதி என அனைவரும் கரண்ட் ஷாக்கில் மாட்டிக் கொண்டார்கள். பிறகு அங்கு வந்து மீனா, கையில் ஒரு மட்ட கம்பை எடுத்துட்டு வந்து சாரி அத்தை என்ன மன்னிச்சிடுங்க சொல்லி விஜயா கையை அடித்ததால் அனைவரும் கீழே விழுந்து விடுகிறார்கள். ஆனாலும் விஜயா வாய் கூசாமல் என்னை கொள்வதற்காகத்தான் பிளான் பண்ணியா என்று மீனா மீது பழி போடப் போகிறார்.

Trending News