Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவை கல்யாண மண்டபத்திற்கு டெக்ரேஷனை பண்ண விடாமல் ஆக்க வேண்டும் என்று நினைத்த விஜயா, கைவலி டிராமாவை போட்டு விட்டார். அதன்படி மீனாவை எங்கேயும் வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே வைத்து கை வலிக்குது ஒத்தடம் போடணும் வெந்நீர் போட்டு கொடு என்று அதிகாரம் பண்ண ஆரம்பித்தார்.
அதன் பிறகு சாப்பிடுவதற்கு வித்தியாசமாக சமைத்துக் கொடுக்க சொல்லி கேட்டார். கையில் மருந்து தேச்சி விடனும் என்று தொடர்ந்து வேலை வாங்கிக் கொண்டே இருந்தார. இதனால் மீனா மண்டபத்திற்கு போக முடியாமல் எடுத்த ஆர்டரில் தோல்வியாகி அவமானப்பட போறார் என்று விஜயா சந்தோஷப்பட்டு கொண்டார். ஆனால் மீனா இதை நினைத்து துவண்டு போகாமல் இதன் மூலம் நாம் என்ன பண்ணலாம் என்று சிந்தித்தார்.
அதன்படி முத்துவுக்கு போன் பண்ணி அத்தைக்கு உடம்பு முடியலை நான் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைக்காங்க. அதனால் நான் வீடியோ கால் பண்ணி சொல்ல சொல்ல எல்லோரும் அங்கே அதை செஞ்சு விடுங்க என்று முத்துவிடம் சொல்லிவிடுகிறார். அதன்படி மண்டபத்தில் இருக்கும் மீனாவின் தோழிகள் மற்றும் மீனாவின் தங்கை சீதா அனைவரும் சேர்ந்து மண்டபத்தை அழகாக டெக்கரேஷன் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
கூடவே இருந்து முத்துவும் அனைத்து உதவிகளையும் செய்து மீனா சொன்ன படி மண்டபத்தை வெற்றிகரமாக டெகரேஷன் பண்ணி விட்டார்கள். இதை கேள்விப்பட்ட சிந்தாமணி உடனே விஜயாவுக்கு போன் பண்ணி பேசுகிறார். அப்பொழுது விஜயா நீங்க சொன்னபடி மீனாவை வெளியே போகாதபடி வீட்டுக்குள் வைத்து கை வலிக்கு டிராமாவை போட்டு எனக்கு பணிவிடை பண்ண வைத்து விட்டேன்.
இனி எந்த டெக்கரேஷனும் மீனாவுக்கு கிடைக்காது உங்களுக்கு சந்தோசம் தானே என்று விஜயா, சிந்தாமணி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு சின்னமணி இந்த விஷயத்தில் நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீங்க, மீனா வீட்டு வேலையும் பார்த்து மண்டபத்தில் வீடியோ கால் மூலம் எல்லா டெக்கரேஷனையும் செய்து முடித்து விட்டார். இனி இதன் மூலம் மீனாவுக்கு வெற்றி கிடைத்துவிடும்.
பிறகு உங்களை மதிக்கவே மாட்டாள் என்று கோபத்துடன் சிந்தாமணி விஜயாவிடம் சொல்லிவிட்டார். ஆனால் இவர்கள் பேசுவதை ரூமுக்கு வெளியே நின்று மீனா கேட்டுக் விட்டார். பிறகு முத்து வந்ததும் மீனா நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். இதை கேள்விப்பட்ட முத்து, இந்த அம்மாவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்து குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் வரவழைத்து விஜயா செய்த தில்லாலங்கடி வேலையை போட்டுக் கொடுக்கிறார்.
உடனே அண்ணாமலை உனக்கு எவ்ளோ வயசு ஆகியும் நீ திருந்தவே மாட்டியா? இந்த மாதிரி வேலையெல்லாம் உனக்கு தேவைதானா உன்னுடைய புத்தி மாறவே செய்யாதா? என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு விஜயாவை வெளுத்து வாங்கி விட்டார். இதோட போதாது கன்னத்தில் பளார் என்று இரண்டு அடி விட்டிருந்தால் விஜயாவின் கொட்டம் அடங்கி இருக்கும்.