வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தங்கமயிலுக்காக பாண்டியன் தலையில் மிளகாய் அரைக்கும் மீனா ராஜி.. புது ட்ராமா போடும் பாக்கியம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலின் அம்மா ஆசைப்பட்ட மாதிரி தங்கமயிலுக்கு தாலி பெருக்கு பங்க்ஷன் பண்ணுவதற்கு பாண்டியன் வீட்டில் வந்து பேசி விட்டார். அதற்கு கோமதி, மீனா மற்றும் ராஜிக்கும் சேர்த்து பண்ணலாம் என்று சொல்லிய நிலையில் பாண்டியன் ஒகே என்று சம்மதம் கொடுத்து விட்டார்.

அந்த வகையில் மூன்று மருமகள்களுக்கும் சேர்த்து பாண்டியன் வீட்டில் தாலி பெருக்கு பங்க்ஷன் நடக்கப்போகிறது. அதற்காக கோமதி பேங்கில் இருந்து மருமகள்களின் நகையை எடுத்துட்டு வந்து விட்டார். அடுத்து ஃபங்ஷனுக்கு தேவையான அனைத்து வேலைகளும் பாண்டியன் வீட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக தங்கமயிலின் அம்மா அப்பா அனைவரும் வந்து விட்டார்கள். பிறகு ஒவ்வொருவரும் கிளம்பி கொண்டிருக்கும் பொழுது கோமதி, தங்கமயில் நகையை எடுத்துட்டு பாக்கியத்திடம் கொடுக்கப் போகிறார். அதை பாக்கியம் வாங்கியதும் ராஜியின் நகையை தான் அவங்க அம்மா கொடுத்தது மாதிரி கொடுத்து திருப்பி வாங்கிட்டாங்களா.

இப்போ இந்த ஃபங்ஷன்ல வெறும் கழுத்தில் இருக்க வேண்டாம். தங்கமயில் நகையை கொஞ்சம் தருகிறேன் போட சொல்லுங்க என்று சொல்கிறார். ஆனால் பண்றது பொய்யும் பித்தலாட்டம், நகை போலியான நகை இதெல்லாம் தெரிந்தும் சும்மா சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக பாக்கியம் அவ்வப்போது இந்த மாதிரி நடித்துக் கொள்கிறார்.

இது தெரியாத கோமதி, பாக்கியத்திடம் ராஜிக்கு என்னுடைய நகை இருக்கிறது, நான் கொடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி போய் விடுகிறார். பிறகு ராஜி மற்றும் மீனா பங்ஷனுக்கு ரெடி ஆகி விட்டார்கள். அதனால் மொட்டை மாடியில் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தங்கமயில், அம்மா அப்பாவை மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போயி என்ன தைரியத்துல ஏன் நகையே ராஜியை போட சொல்லி இருப்பாய்.

எட்டு கிராம் தவிர மத்த எல்லாமே கவரிங் நகை, தெரிந்தும் நீ சொன்னால் நம் மாட்டிக் கொள்ள மாட்டோமா என்று கேட்கிறார். ஆனால் இதை அந்தப் பக்கம் இருந்து ராஜி மற்றும் மீனா கேட்டுக் கொண்டார்கள். உடனே அவர்களிடம் போய் நீங்க கவரிங் நகையா கொண்டு வந்தீங்க என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் ஆமாம் என்று சொல்லிய நிலையில் ராஜி மற்றும் மீனாவிற்கு உண்மை தெரிந்து அதிர்ச்சியாகி நிற்கிறார்கள்.

ஆனால் தங்கமயில் அம்மா பாக்கியம் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். தெரிந்தால் என் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று மீனா மற்றும் ராஜியிடம் கெஞ்சுகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே தியாகி மாதிரி தான் இருப்பார்கள். அந்த வகையில் நிச்சயம் இந்த கவரிங் நகை விஷயத்தை பாண்டியன் மற்றும் குடும்பத்திடமும் இருந்து மறைத்து தங்கமயிலை காப்பாற்றி விடுவார்கள்.

ஆனால் இதுவே இவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் ஏதாவது தங்கமயிலுக்கு தெரிந்து விட்டால் அதை உடனே குடும்பத்திற்கும் பாண்டியனுக்கும் தெரியப்படுத்திவிட்டு தான் மற்ற வேலையை பார்ப்பார். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் அப்படியே நல்லவர் போல டிராமா போட்டு ராஜி மற்றும் மீனாவை கவுத்து விட்டார்கள். பொய்யும் பித்தலாட்டமும் பண்ணும் பொழுது தங்கமயில் பார்த்தால் எரிச்சலாக இருக்கும்.

ஆனால் இப்பொழுது கெஞ்சும் பொழுது பாவமாகவும் இருக்கிறது. அதனால் நிச்சயம் மீனா மற்றும் ராஜி அவர்களுக்கு தெரிந்த உண்மையை யாரிடமும் சொல்ல மாட்டார்கள். எண்ணமோ பணத்திலேயே உருண்டு பிரண்டது போல் ஓவராக அலப்பறை பண்ணிட்டு வந்த பாக்கியம் தற்போது ஒட்டுமொத்தமாக மீனா மற்றும் ராஜிடம் சரண் அடைந்து கெஞ்சுகிறார்.

அட்லீஸ்ட் இதுல 300 எபிசோடு மேலே தங்கமயிலின் ரகசியங்கள் ஓரளவுக்கு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. ஆனால் சிறகடிக்கும் ஆசை சீரியலில் 600 எபிசோடு ஆகிய நிலையில் இன்னும் ரோகிணி பற்றிய ஒரு விஷயம் கூட வெளியே வராமல் இருக்கிறது. கொஞ்சம் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனரை பார்த்து குமரன் சார் கத்துக் கொள்ள வேண்டும்.

Trending News