வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாண்டியனிடம் மறுபடியும் பொய் சொன்ன மீனா ராஜி.. புருசனை மட்டும் நம்பியதால் அவமானப்பட்ட தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி மற்றும் கதிர் பிடிக்காமல் திருமணம் செய்தாலும் தற்போது கணவன் மனைவி என்ற பந்தத்துடன் வாழ ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் மனதிற்குள் காதல் வந்தது தெரியாமல் இரண்டு பேரும் பார்க்கும் பொழுது முட்டி மோதி கொள்கிறார்கள். அப்படித்தான் தற்போது ராஜி கதிரின் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.

இதனை அடுத்து தங்கமயில், மீனா மற்றும் ராஜி பாண்டியனின் 50-வது பிறந்த நாளுக்கு பிளான் பண்ணுகிறார்கள். அந்த வகையில் புது ட்ரெஸ், கிப்ட், வீட்டு அலங்காரம் பண்ணுவதற்கான பொருட்களை வாங்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருக்கிறார்கள். ஆனால் எப்படி வீட்டில் இருப்பவர்களிடம் போய் சொல்லிவிட்டு போகலாம் என்று யோசித்து இருக்கும் நிலையில் ஐடியா அவர்களுக்கு கிடைத்து விட்டது.

படிப்பறிவு இல்லாமல் கணவரை நம்பியதால் அவமானப் படும் தங்கமயில்

அந்த சமயத்தில் வீட்டுக்கு வரும் பாண்டியனிடம் மீனா நான் ஆபீசுக்கு கிளம்புகிறேன் என்று சொல்கிறார். ராஜி நானும் காலேஜுக்கு கிளம்பி விட்டேன் என்று சொல்கிறார். அப்பொழுது தங்கமயில் என்னுடைய அம்மா வீட்டிற்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி பாண்டியனிடம் பெர்மிஷன் கேட்கிறார்.

பாண்டியனும் தாராளமாக போயிட்டு வா போகும்பொழுது வீட்டிற்கு ஏதாவது பண்டங்கள் வாங்கிட்டு போ என்று கையில் 200 ரூபாய் காசு கொடுக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாக பாண்டியன் பிறந்தநாளுக்கு ஏதாவது பொருட்களை வாங்க வேண்டும் என்று பிளான் பண்ணும் பொழுது ராஜி மற்றும் மீனா கையில் பணம் இருக்கிறது.

ஆனால் தங்கமயில் தன்னிடம் பணம் இல்லை என்று யோசித்து இருக்கும் பொழுது ராஜி நீங்கள் சரவணன் மாமா அல்லது உங்க வீட்டில் கேட்டு வாங்கிட்டு வாங்கள் என்று சொல்கிறார். உடனே தங்கமயில், சரவணன் கிட்ட நான் அம்மா வீட்டுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்கிறார். போகும்போது ஏதாவது வாங்கிட்டு போகலாம் என்று சொல்லி பணம் கேட்கிறார்.

ஆனால் சரவணன், என் கிட்ட ஏது பணம், என்னிடம் பணம் கிடையாது என்று சொல்லி அம்மாவிடம் கேளு என்று அனுப்பி வைக்கிறார். ஆக மொத்தத்தில் ஒவ்வொருவரிடமும் அவமானப்பட்டு தங்கமயில் நிற்கிறார். கடைசியில் மீனா மற்றும் ராஜி, பாண்டியனுக்காக செலவழிக்கும்போது தங்கமயிலால் எதுவும் வாங்க முடியாமல் சும்மா வேடிக்கை பார்க்கும் அளவிற்கு அவமானப்பட போகிறார்.

இதற்கு தான் படிப்பு எப்பொழுதுமே நம்முடைய சொந்த காலில் நிற்பதற்கு துணை புரியும். என்னதான் கட்டின புருஷனாக இருந்தாலும் காசுக்காக மற்றவர்களை நம்பி இருப்பது ஒரு அவமானம் தான் என்பது தங்கமயில் மூலம் பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும். இதனை தொடர்ந்து பாண்டியனிடம் மறுபடியும் பொய் சொல்லி மீனா ராஜி சர்ப்ரைஸ் பண்ணுவதற்கு கிளம்பி விட்டார்கள்.

அடுத்ததாக பாண்டியனின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு பாக்கியா குடும்பத்தையும் அழைப்பதற்காக ராஜி மற்றும் மீனா அங்கே போயி அனைவரையும் கூட்டிட்டு வந்து மகா சங்கமாக பாண்டியனின் பிறந்தநாள் விழா நடக்கப் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News