புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜயா ஆடிய ஆட்டத்திற்கு பதிலடி கொடுத்த மீனா.. மனோஜிடமிருந்து தப்பிக்க ஹனிமூன் பிளான் பண்ணிய ரோகினி

Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் மீனா கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் முத்து என்னை மதிக்காத ஒரு இடத்திற்கு நீ போகக்கூடாது என்று மீனாவை தடுக்க நினைத்தார். ஆனால் முத்துவின் பேச்சை கேட்காமல் மீனா போனதால் முத்து குடித்து வீட்டுக்கு வந்து மீனாவிடம் சண்டை போட்டு தனியாக புலம்பிக்கொண்டார்.

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு சந்தோஷம் என்று சொல்வதற்கு ஏற்ப முத்து மீனா சண்டை போட்டு பேசாமல் இருக்கிறார்கள். அதனால் முத்து குடித்துவிட்டு வருகிறார் என்று விஜயா சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். அந்த சந்தோஷத்தில் விஜயா, மீனாவிடம் வந்து இப்பொழுது தான் எனக்கு உங்களை பார்க்கும் பொழுது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

மனோஜிடமிருந்து தப்பிக்க குழந்தையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் ரோகிணி

அதுவும் இந்த நேரத்தில் என்னுடைய சந்தோஷத்திற்கு ஏற்ற மாதிரி அல்வா சாப்பிடணும் என்பது போல் தோன்றுகிறது என வஞ்சகமாக பேசினார். இதனைத் தொடர்ந்து எப்படி முத்துவை சமாதானப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருந்த மீனாவிற்கு தோழிகள் கொடுத்த ஐடியாவின் படி முத்துவுக்கு பிடித்த சாப்பாடு செய்து கொடுத்து அவர் மனதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.

அதே மாதிரி முத்துவை சமாதானப்படுத்தி மீனாவுடன் பேச வைக்க வேண்டும் என்று மீனாவின் அம்மா மற்றும் தங்கை சீதா, முத்துவை பார்த்து பேசுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சம் கூட மனசு இறங்காத முத்து, காரில் வரும் ஒரு அம்மாவின் மனக்குமரலை கேட்டு நாம் எந்த அளவுக்கு தப்பு பண்ணி இருக்கோம் என்று புரிந்து கொண்டார்.

அந்த வகையில் ஒரு பொண்ணுக்கு புகுந்த வீடு எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி பிறந்த வீடும் ரொம்ப முக்கியம் தான். அதனால் அந்த விஷயத்தில் அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. என்னுடைய அண்ணனும் அம்மாவும் தான் எவ்வளவோ தப்பு பண்ணி இருக்காங்க, ஆனால் மீனா எப்பொழுதுமே அவங்க கூட பேச கூடாது என்று என்னை சொன்னதே இல்லையே.

அப்புறம் நான் மட்டும் ஏன் சத்யாவிடம் பேசக்கூடாது என்று மீனாவை கண்டிஷன் பண்ணினேன் என்று செய்த தவறை புரிந்து கொண்டு மீனாவை சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்டு விட்டார். அப்படி வீட்டுக்கு போகும் பொழுது அவருக்கு பிடித்த அல்வாவை வாங்கிட்டு போகிறார். இருவரும் சமாதானம் ஆன நிலையில் இனி எந்த காரணத்தை கொண்டும் இந்த மாதிரி ஒரு விஷயத்திற்கு சண்டை போடக்கூடாது என்று பேசி சமரசம் செய்து கொண்டார்கள்.

இதை பார்த்து விஜயா வயிற்றெரிச்சல் பட ஆரம்பித்து விட்டார். என்ன நேற்று வரை கோபமாக இருந்த முத்து இப்ப திடீரென்று பொண்டாட்டி பக்கம் சாய்ந்து விட்டார் என்று குழப்பத்தில் நிற்கிறார். உடனே மீனா, முத்து வாங்கிட்டு வந்த அல்வாவை எடுத்துட்டு விஜயாவிடம் கொடுக்கிறார். இந்தாங்க அத்தை, உங்களுக்கு பிடித்த அல்வா இருக்கிறது.

நேற்றே அல்வா சாப்பிடணும் போல இருக்கிறது என்று சொன்னீங்களா. எடுத்து சாப்பிட்டு மனதார சந்தோஷப்பட்டு போங்க என்று விஜயா ஆடிய ஆட்டத்திற்கு மீனா சரியான பதிலடி கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூம் இல் இருக்கும் பொழுது ஸ்கூலில் இருந்து மார்க்கெட்டிங் பண்ணுவதற்காக ரோகிணியை பார்த்து பேசுகிறார்கள்.

அப்பொழுது ரோகினி, கிறிஸ் அந்த ஸ்கூலில் சேர்க்கும் விதமாக விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த மனோஜிடமிருந்து தப்பிப்பதற்காக நமக்கு பிறக்க போகும் குழந்தைக்காக இப்பொழுது விசாரிக்கிறேன் என்று சொல்லி சமாளித்து விட்டார். உடனே மனோஜ், உனக்கு குழந்தை மேல் இவ்வளவு ஆசை இருக்கிறது என்றால் நம் நல்ல ஒரு ஜோசரை பார்க்கலாம் என்று கூப்பிடுகிறார்.

அதற்கு ரோகிணி, அதற்கு ஏன் ஜோசியரை பார்க்க வேண்டும் ஹாஸ்பிடல்ல போய் தான் செக் பண்ணனும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் மனோஜ் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை, நமக்கு தனிமை ரொம்பவே தேவை அதனால் நம் இருவரும் சேர்ந்து ஹனிமூன் போகலாம் என்று சொல்கிறார். ரோகினியும் இது தான் சரியான சான்ஸ் என்று ஹனிமூன் போவதற்கு பிளான் பண்ணி விட்டார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News