வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

புது புரளியை கிளப்பும் மீனா, ரோகினிக்கு பதிலாக மனோஜை வேவு பார்க்க போகும் முத்து.. கிருஷ்க்கு வந்த சோதனை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், டிராபிக் போலீசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முத்து எடுத்த வீடியோவை சோசியல் மீடியாவில் போட்டுவிட்டார். இதனால் அந்த ட்ராபிக் போலீஸ் அருண் மூன்று நாள் சஸ்பெண்ட் ஆகும்படி நிலைமையாகி விட்டது. இதனால் கவலையில் இருந்த அருணை சந்தித்து பேசிய சீதா ஆறுதல் படுத்தி அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெறுகிறார்.

அடுத்ததாக இந்த விஷயத்தை வீட்டிற்கு வந்து மீனாவிடம் முத்து சொல்கிறார். அப்பொழுது மீனா இதுல சந்தோசப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்தது ரொம்ப பெரிய தவறு. அவருடைய வேலையை தான் அவர் பார்த்திருக்கிறார். ஆனால் நீங்கள் பண்ணியது நல்லதில்லை என்று சொல்கிறார். உடனே முத்து மீனாவிடம் கோபப்பட்டு சண்டை போடுகிறார்.

பிறகு மீனாவை சமாதானப்படுத்தும் விதமாக கார் சொல்லிக் கொடுக்க முத்து கிளம்பிவிட்டார். அப்பொழுது பொறுமையை இல்லாமல் முத்து கோபப்பட்டு கொண்டே மீனாவிடம் கார் ஓட்டுவதை சொல்லிக் கொடுக்கிறார். அதற்கு மீனா யாருக்காவது ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுக்கிறோம் என்றால் நமக்கு பொறுமை தேவை. இப்படி கோபப்பட்டு கொண்டே இருந்தீங்கன்னா எப்படி உங்ககிட்ட வந்து எல்லோரும் கத்துப்பாங்க என்று முத்துவிடம் சொல்லி புரிய வைக்கிறார்.

இதனை தொடர்ந்து ரோகிணிக்கு அவருடைய அம்மா போன் பண்ணி கிரிஷ்க்கு பெற்றோர்கள் சந்திப்பு இருக்கிறது நீ வரவேண்டும் என்று கூப்பிடுகிறார். ரோகிணி சரி என்று சொல்லிய நிலையில் வீட்டிலிருந்து அண்ணாமலை வேலைக்கு கிளம்புகிறார். அப்பொழுது ரோகினி இன்னைக்கு தான் உங்களுக்கு வேலை கிடையாது தானே, ஏன் போறீங்க என்று கேட்கிறார்.

அதற்கு அண்ணாமலை இன்னைக்கு பெற்றோர்கள் சந்திப்பு இருக்கிறது அதனால் எனக்கு வேலை அதிகமாக இருப்பதால் இன்று போய் பார்க்க போகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். இதனால் பெற்றோர்கள் சந்திப்புக்கு ரோகிணியால் போக முடியாமல் போய்விடுகிறது. அத்துடன் அண்ணாமலை வேலைக்கு கிளம்பிய நிலையில் முத்து நான் டிராப் பண்ணுகிறேன்.

அதன் மூலம் அங்கே படிக்கும் கிரிஷை நானும் பார்த்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்த மாதிரி இருக்கும் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அப்படி போன நிலையில் கிரிஷை பார்த்து மீனா பேசுகிறார். உடனே ரோகிணி அம்மா சரியாக பேசாமல் கிரிஷை கூட்டிட்டு போய் விடுகிறார். இதனால் சந்தேகப்படும் மீனா, ஒருவேளை இந்த கிரிஷ் உங்க அண்ணன் மனோஜ் உடைய குழந்தையாக இருக்கலாம்.

அதனால்தான் நம்மிடம் இருந்து விலகப் பார்க்கிறார்கள் என்று மீனா, முத்துவிடம் சொல்கிறார். உடனே முத்து அப்படி என்றால் அம்மா யாராக இருக்கும் என்று கேட்ட நிலையில் மீனா, ஜீவா மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று புதுசாக ஒரு புரளியை கிளப்பி விடுகிறார். முத்துவும் மீனா சொல்வது சரியாக இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்து சிஐடி வெளியே பார்க்க முடிவு பண்ணி விட்டார்கள்.

அந்த வகையில் மனோஜை வேவு பார்ப்பதற்கு முத்து ரெடியாகிவிட்டார். ஆனால் க்ரிஷுக்கு உண்மையான அம்மா ரோகினி அப்பா யாரு என்பது கூட தெரியாது. ஆனால் முத்து மற்றும் மீனா கற்பனை கோட்டை கட்டும் அளவிற்கு கிருஷ் அம்மா ஜீவா அப்பா மனோஜ் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதன் மூலம் நிச்சயம் ரோகிணி மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Trending News