வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Pandian Stores 2: பாண்டியனின் கௌரவத்தை காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கும் மீனா.. சரவணனுக்கு ஜால்ரா பண்ணும் கதிர்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், சரவணன் மற்றும் தங்கமயிலின் கல்யாணத்திற்காக பத்திரிக்கை அடித்து வீட்டிற்கு கொண்டு வருகிறார். பத்திரிகையை பார்த்த ஒவ்வொருவரும் சந்தோஷமாகி விட்டார்கள். அத்துடன் யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்று லிஸ்ட் படி ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.

அதே மாதிரி மீனாவிற்கும் சில பொறுப்புகளை ஒப்படைத்து கல்யாணம் முடிகிற வரை வேலையை கொஞ்சம் தள்ளி வை என்று பாண்டியன் சொல்லிவிட்டார். இதனால் கொஞ்சம் கடுப்பான மீனாவை செந்தில் ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி விட்டார். பிறகு பாண்டியன், மீனாவின் குடும்பத்திற்கு சம்மந்தி என்கிற முறையில் பத்திரிக்கை வைக்க வேண்டும்.

அதனால் நானும் கோமதியும் போய்க் கொடுத்துவிட்டு வருகிறோம் என்று பாண்டியன் சொல்கிறார். உடனே மீனா நீங்க போனால் அங்கே உங்களை அவமானப்படுத்தி விடுவார்கள். அதனால் நீங்கள் போக வேண்டாம். உங்களுடைய கௌரவம் எங்களுக்கு ரொம்ப முக்கியம். நானும் செந்திலும் போய் பத்திரிக்கையை கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டார்.

ராஜ்ஜியை சமாதானப்படுத்திய கதிர்

பிறகு போகும் வழியில் செந்திலிடம் நம் அங்க போக வேண்டாம். மாமா கிட்ட கொடுத்தாச்சு என்று சமாளிக்கலாம் என்று மீனா சொல்கிறார். அதற்கு அப்பாவுக்கு தெரிந்து விட்டால் அதுவும் ஒரு பிரச்சினையாக இருக்கும். அதனால் எந்தவித விபரீதம் ஆனாலும் பரவாயில்லை நாம் போய் கொடுத்துட்டு வரலாம் என்று செந்தில் சொல்கிறார்.

உடனே மீனா சரி மாமாவுக்காக நான் இதை செய்கிறேன் என்று சொல்லி மீனா அம்மா வீட்டுக்கு செந்திலை கூட்டிட்டு போகிறார். இதற்கிடையில் தங்கமயிலின் குடும்பத்திற்கு சென்று கல்யாண பத்திரிக்கையை கொடுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை அடிபடுகிறது. உடனே கதிர், சரவணன் அண்ணன் கிட்ட கொடுத்து விடலாம். அவர் போய் கொடுத்துட்டு வருவார் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் சரவணனுக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் தங்கமயில் வீட்டுக்கு போயிட்டு கொஞ்ச நேரம் பார்த்து பேசிட்டு வரலாம் என்று சந்தோசத்தில் குஷி ஆகிவிட்டார். கூட யாரு போகலாம் என்று பாண்டியன் கேட்டதும் கதிர் நான் போகிறேன் என்று அண்ணனுக்காக அப்பாவை தாஜா பண்ணி விட்டார். அந்த வகையில் கதிர் மற்றும் சரவணன் தங்கமயில் வீட்டிற்கு போகப் போகிறார்கள்.

இதற்கிடையில் கதிர் சாப்பாடு டெலிவரி பண்ணிட்டு வரும்போது காலில் அடிபட்டு விடுகிறது. அதனால் யாருக்கும் தெரியாமல் ரூமில் இருந்து மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார். உள்ளே வந்து பார்த்த ராஜி ரொம்பவே பயந்து போய் என்ன ஆச்சு எப்படி என்று பதட்டத்துடன் கேட்கிறார். பிறகு கதிர் எப்படியோ ராஜியை சமாளித்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து பாண்டியன் வீட்டில் கல்யாண கலை நெருங்கி வந்துவிட்டது. ஆனால் அதற்குள் சரவணன் தங்கமயில் இல்லை என்றால் என்னால் வாழவே முடியாது என்ற அளவிற்கு காதலுக்குள் புகுந்து விட்டார். அதே மாதிரி எந்த பிரச்சனை வந்தாலும் நம்ம பொண்ண கைவிட்டு விடக்கூடாது என்று தங்கமயில் அம்மாவும் சரவணனை மகளை வைத்து உஷார் பண்ணி விட்டார்.

Trending News