Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகிணி மற்றும் மனோஜ், ஜீவாவிடம் இருந்து வட்டி முதலுமாய் 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டார்கள். இந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் குடும்பத்தில் இருப்பவரிடம் ரோகிணி தன்னுடைய அப்பா கொடுத்ததாக போய் சொல்லிவிட்டார்.
இந்த பணத்தை வைத்து மனோஜ் பிசினஸ் பண்ணி வாழ்க்கையில் முன்னேறி விடுவார் என்று ரோகினி நினைக்கிறார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனோஜை தன்வசம் வைத்துக் கொண்டு குடும்பத்துக்கு எதிராக மாற்றி நான் என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மையாக இருப்பார் என ரோகிணி பிளான் பண்ணி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து முத்து வழக்கம் போல் சவாரி பண்ணும் பொழுது அதில் ஒரு கடை ஓனர் முத்துவிடம் நெருங்கி பேசி வருகிறார். அப்பொழுது முத்து கடை உரிமையாளரை இறக்கிவிட்ட இடத்தில் கடையில் பிரச்சினை பண்ணுவதற்காக ரவுடி கும்பல் நிற்கிறார்கள்.
மனோஜ்க்கு உதவும் முத்து
இதனை சரி செய்து முத்து கடை உரிமையாளரிடம் நல்ல பெயர் வாங்கி விட்டார். பிறகு இந்த கடை நான் விற்பனை பண்ண போகிறேன். அதற்கு ஒரு நல்ல ஆளை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே முத்து என்னுடைய அண்ணனும் பிசினஸ் பண்ணுவதற்காக முயற்சி எடுத்து வருகிறார்.
அவர் ஏகப்பட்ட படிப்பை படித்து வைத்திருக்கிறார் என்று மனோஜ் பற்றி நல்ல விதமாக கடை உரிமையாளரிடம் முத்து சொல்கிறார். உடனே நீங்கள் அவரை கூட்டிட்டு வாங்க மற்ற விஷயங்களை அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று ஓனர் சொல்கிறார். பின்பு முத்து வீட்டிற்கு வந்து மனோஜ்க்கு ஏற்ற மாதிரி ஒரு பிசினஸ் வைப்பதற்கு கடை இருக்கிறது என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் விஜயா நீ எப்படி அவனுக்கு நல்லது நினைப்பாய். உனக்கு அவன் முன்னேறினால் பிடிக்காது. உன்னை நம்பி நாங்க எப்படி இதில் இறங்க முடியும் என்று விஜயா வாய்க்கு வந்தபடி முத்துவை அசிங்கப்படுத்தி பேசுகிறார். அதற்கு மீனா அவருடைய நல்ல எண்ணம் உங்களுக்கு என்னைக்கு தான் புரியப்போகுது என்று சொல்கிறார்.
பின்பு ரோகினி அந்த ஷோரூமை போய் பார்ப்போம். அதன் பிறகு என்னவென்று முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிய நிலையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து ஏசி ஷோரூமுக்கு போகிறார்கள். அங்கே போனதும் மனோஜ் முதலில் போய் அந்த ஓனர் சீட்டில் உட்கார்ந்து ஜம்பமாக போஸ் கொடுக்கிறார்.
இதை பார்த்து ரோகினி மற்றும் விஜயா ஆனந்தப்பட்டு பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். வழக்கம்போல் முத்து, கடையை சுற்றி பார்க்கச் சொன்னால் எங்க போய் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று மனோஜை கிண்டல் அடிக்கிறார். அத்துடன் முத்து, மனோஜை வாடா போடா என்று கூப்பிட்டார். அதற்கு ரோகிணி மரியாதை கொடுத்து பேசுங்கள் எல்லோரும் முன்னாடியும் இப்படித்தான் கூப்பிடுவீங்களா என்று கேட்கிறார்.
அதற்கு மீனா அவர் எப்பொழுதும் போல அண்ணன் என்கிற உரிமையில் தான் பேசுகிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ரோகிணியை பார்த்து மீனா கேட்கிறார். இப்படி இவர்களுக்குள் இந்த பஞ்சாயத்து முடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த முத்துவிடம் மீனா ஒரு உண்மை கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்.
அதாவது எந்த அம்மாவும் பெற்ற குழந்தைகளை இந்த அளவிற்கு வெறுக்க மாட்டார்கள். இப்போது வேண்டுமென்றால் உங்க அம்மா உங்களை திட்டலாம். ஆனால் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது உங்கள் மீது பாசமாகத்தான் இருந்திருப்பார். அதன் பிறகு உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன பிரச்சனை நடந்தது என்று எனக்கு தெரிந்தாக வேண்டும். சொல்லுங்கள் என முத்துவிடம் மீனா கேட்கிறார். ஆனால் இப்போதைக்கு இந்த உண்மை வெளிவருவதாக தெரியவில்லை.
இதனை தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் பிசினஸ் ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் ஜீவா மூலம் மிகப்பெரிய ஆப்பு வரப்போகிறது. அதாவது பணத்தை திருப்பிக் கொடுத்த உண்மை இதுவரை யாருக்கும் தெரியாத நிலையில் ஜீவா மூலம் முத்துவிற்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி தெரிந்து விட்டால் முத்து கண்டிப்பாக அந்த பணத்தை வாங்கி அப்பா பணம் என்று சொல்லி அண்ணாமலையிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்.