திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு படத்தில் கூட விஜய் உடன் ஜோடி போடாத மீனா.. வாய்ப்பு வந்தும் ரிஜெக்ட் செய்த 2 படங்கள்

தனது கண்ணழகால் தற்போது வரை ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகை மீனா, 90 களில் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, பிரபுதேவா, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். 90களில் நடிகை மீனாவின் கால்ஷீட் கிடைக்க வேண்டுமென்றால் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்பாகவே அவரை புக் செய்யவேண்டும்.

அந்த அளவுக்கு ஒரே வருடத்தில் இவரது நடிப்பில் 10 படங்களுக்கு மேல் வெளியாகும். அதிலும் மீனா நடித்த முத்து, எஜமான், அவ்வை ஷண்முகி, ரிதம் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெருமளவில் பாராட்டப்பட்டது. இதனிடையே அண்மையில் மீனாவின் நாற்பது ஆண்டுக்கால வெற்றிகரமான சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் மீனா40 நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Also Read: மீனாவுக்கு சுட்டு போட்டாலும் இது வராது.. ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்

அந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல், சரத்குமார் வரை பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு மீனாவின் நடிப்பை பற்றியும், அவரது குணத்தை பற்றியும் பேசி புகழ்ந்து தள்ளினார். அந்த வகையில் நடிகை மீனா சினிமாவில் எத்தனையோ சாதனைகளை புரிந்து, பல நடிகர்களின் விருப்பமான நடிகையாக இருந்தும் நடிகர் விஜய்யுடன் மட்டும் கடைசி வரை இணைந்து நடிக்காமல் உள்ளார்.

அதற்கான காரணம் தற்போது வெளியானதையடுத்து, விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் பெயர்களும் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது கோலிவுட்டின் வசூல் மன்னனாக உள்ள நிலையில், இன்றைய சூழலில் அவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டிப் போட்டு நடித்து வருகின்றனர். இதே போல் தான் ஆரம்பக்கால 2000 ஆண்டுகளில் விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் முன் வந்தனர்.

Also Read: சில்வர் ஜூப்ளி இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்த மீனா.. பின்னாளில் வாய்ப்பு கேட்டு அலைந்த சம்பவம்

இப்படி பல நடிகைகள் அவருடன் நடிக்க போட்டிப்போட்டாலும், நடிகை மீனா மட்டும் அசால்டாக 2 படங்களின் வாய்ப்பை உதறித்தள்ளியுள்ளார். இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவான பிரியமுடன் படமும், இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவான பிரண்ட்ஸ் படத்திலும் நடிக்க மீனா தான் முதன்முறையாக தேர்வாகியுள்ளார்.

ஆனால் இப்படங்களின் வாய்ப்பு வந்த சமயத்தில் மீனா பல திரைப்படங்களில் கமிட்டானதால் இந்த இரண்டு படங்களுக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேவயானியும், பிரியமுடன் படத்தில் கௌசல்யாவும் நடித்தனர். ஆனால் நடிகை மீனா வாய்ப்பு இல்லாத சமயத்தில், ஷாஜஹான் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ஐட்டம் டான்ஸ் ஆடி தனது ஆசையை நிறைவேற்றினார்.

Also Read: விஜய்க்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 ஹீரோயின்கள்.. நடிகையாக நடிக்க முடியாத ஆதங்கத்தை தீர்த்த மீனா

Trending News