புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கணவருக்காக அர்ச்சனா போல் பொங்கி எழும் மீனா.. எல்லோரும் மூஞ்சிலும் கரிய பூச போகும் முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஒட்டுமொத்த குடும்பமும் முத்துவை வெறுக்கும் அளவிற்கு ஒரு முரடனாக தெரிய வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் சதி செய்து வருகிறார்கள். அதாவது சுருதியின் அம்மா அப்பாவுக்கு முத்துவை கண்டாலே பிடிக்காது.

அத்துடன் எப்படியாவது வாக்கப்பட்டு போன குடும்பத்திலிருந்து தன்னுடைய மகளையும் மருமகனையும் தனியாக பிரித்து நம்முடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்ருதியின் அம்மா நினைக்கிறார். அதற்காக சுருதிக்கும், ரவிக்கும் தாலி பெருக்கு பங்க்ஷன் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப் போகிறார்கள்.

இதில் முத்துவை அதிகமாக சீண்டி கெட்டவராக காண்பித்து அந்த குடும்பத்தில் இருந்து சுருதியை பிரித்து விட வேண்டும் என்று அதற்கான பல ஆட்களை மண்டபத்திற்குள் ரெடி பண்ணிவிட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, விஜயாவிடம் இருந்து எஸ்கேப் ஆவதற்காக முத்துவை ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டி விட்டால் என்னை பற்றி ஞாபகம் அவர்களுக்கு வராது என்று தோழி மூலம் ரோகிணி பிளான் பண்ணுகிறார்.

அதற்காக ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி மண்டபத்திற்கு வர வைக்கிறார். அவர் மூலம் எப்படியாவது முத்துவை அதிகமாக குடிக்க வைத்து விட்டால் பிரச்சினை பண்ணி விடுவார் என்று ஏற்பாடு பண்ணி இருக்கிறார். இது என்னடா முத்துவுக்கு வந்த சோதனை என்பதற்கேற்ப நாலா பக்கமும் முத்துவை கவுக்க சதி நடக்கிறது.

அர்ச்சனா போல் பொங்கி எழும் மீனா

ஆனால் என்ன பிரச்சனை வந்தாலும் மீனா இருக்கும் வரை முத்துவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. அதாவது திருமதி செல்வம் நாடகத்திலும் இதே மாதிரி ஒரு சூழ்நிலை தான் ஏற்பட்டது. அதாவது செல்வத்தை கல்யாண மண்டபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் அசிங்கப்படுத்துவார்கள்.

இதை பார்த்த அர்ச்சனா ஆவேசத்தின் உச்சகட்டமாக செல்வத்துக்கு சப்போர்ட்டாக கொந்தளித்து பேசி இருப்பார். அதே மாதிரியான காட்சிகள் தான் தற்போதும் வரப்போகிறது. ஏனென்றால் அந்த நாடகத்தை டைரக்ட் பண்ணிய எஸ் குமரன் தான் சிறகடிக்கும் ஆசை சீரியலையும் எடுத்து வருகிறார்.

அதனால் கணவருக்காக அர்ச்சனை எப்படி பொங்கி எழுந்தாரோ, அதே மாதிரி மீனாவும் சப்போர்ட் செய்யப் போகிறார். இதனால் முத்துவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று பிளான் பண்ணும் ஒவ்வொரு மூஞ்சிலும் கரியை பூசும் விதமாக முத்துவின் நடவடிக்கைகள் இருக்கப் போகிறது.

Trending News