ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்திற்கு கவச குண்டலமாக இருக்கும் மீனா.. ஆமை போல் வீட்டிற்கு நுழையும் சூனியக்காரி

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனுக்கு பார்த்திருக்கும் தங்கமயிலின் குடும்பம் எப்படிப்பட்டது என்று சரியாக விசாரிக்காமல் கண்மூடித்தனமாக பாண்டியன் நம்பிக்கை வைத்து விட்டார். இதனால் பெண் வீட்டார்கள் குடும்பம் கொஞ்சம் கூட தப்பா நினைத்து விடக்கூடாது என்று சக்திக்கு மீறி கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று பாண்டியன் நினைக்கிறார்.

இதற்கிடையில் தங்கமயிலின் அம்மா, சரவணன் இடம் மகளை வைத்து பேசி கொக்கி போட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டார். அதன்படி தங்கமயில் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட்டு தலையாட்டும் பொம்மையாக மாறிவிட்டார் சரவணன். தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் திருமணத்திற்காக ட்ரஸ் வாங்குவதற்கு போய்விட்டார்கள்.

அங்கே போன இடத்தில் தங்கமயில் மற்றும் அவருடைய அம்மா ஓவராக செலவை இழுத்து விட்டு பாண்டியன் தலையில் இடியை இறக்கி விட்டார்கள். அத்துடன் டிரஸ் எடுத்த கையுடன் ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என தங்கமயிலின் அப்பா பெரிய ஹோட்டலுக்கு அனைவரையும் அழைத்துப் போகிறார். அங்கே போனதும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வாய்க்கு வந்தபடி அனைத்து உணவுகளையும் கன்னாபின்னா என்று தங்கமயில் ஆர்டர் போடுகிறார்.

மீனாவை புரிந்து கொள்ளாத பாண்டியன் குடும்பம்

இதை பார்த்து புலம்பிய பாண்டியனின் நிலைமையை சரி செய்யும் விதமாக மீனா உள்ளே புகுந்து விட்டார். அதாவது அவ்வளவு சாப்பாடு வாங்கி விட்டால் எங்களால் சாப்பிட முடியாது. நாங்கள் அந்த அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடிய ஆளு கிடையாது. அதனால் ஆரம்பத்தில் கம்மியாக வாங்கிக் கொள்ளலாம். அது போதாது என்றால் மறுபடியும் ஆர்டர் போட்டுக்கலாம் என்று தங்கமயில் போட்ட ஆர்டரை மீனா கேன்சல் பண்ணி விட்டார்.

உடனே தங்கமயிலின் அம்மா பணத்தை பற்றி எதையும் யோசிக்கிறீங்களா. நாங்க வேணா சாப்பாடுக்கு பணம் கொடுக்கிறோம் என்று அடிக்கடி சொல்லி பாண்டியனை சீண்டி பார்க்கிறார். இதை கேட்டதும் பாண்டியன் அப்படி எல்லாம் இல்லை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று வாய் சாவடால் விட்டு விடுகிறார். உடனே மொத்த பணத்தையும் பாண்டியன் கட்டும் படி அமைந்துவிட்டது.

பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில் எவ்வளவு செலவு ஆனது என்று மொத்தமாக கணக்கு பார்த்ததில் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது என்று பாண்டியன் துவண்டு போய்விட்டார். இன்னும் கல்யாண வேலையை ஆரம்பிக்கவில்லை அதற்குள் இவ்வளவு செலவாயிருக்கிறது என்று மலைத்துப் போய் நிற்கிறார். உடனே மீனா வந்து பாண்டியனுக்கு ஆறுதல் படுத்தி சமாளித்து விடலாம் என்று சொல்கிறார்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து மீனாக்கு மட்டும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மீது நம்பிக்கையே இல்லை. இதை யாருமே கண்டு கொள்ளாத நிலையில் தற்போது ஒவ்வொரு நாளும் பிரச்சினையை சமாளிக்கும் படி பாண்டியன் நிலமை அமைந்துவிட்டது. தங்கமயிலும் சரி அவருடைய அம்மாவும் பாண்டியன் வீட்டிற்குள் ஆமை மாதிரி புகுந்து ஒவ்வொரு பிரச்சனையும் பண்ணி அனைவருடைய நிம்மதியையும் கெடுக்கப் போகிறார்.

அந்த வகையில் பாண்டியன் குடும்பத்திற்கு மிகப்பெரிய சூனியக்காரி ஆக மாறி குடும்பத்தை பிரித்து சின்னா பின்னமாக உடைக்க போகிறார். இதை தெரிந்து கோமதி அண்ணன்கள் சந்தோஷத்தில் குதிக்க போகிறார்கள். ஆனால் மீனா மற்றும் கதிர் இருக்கும் வரை பாண்டியனுக்கும் குடும்பத்திற்கும் ஒன்று ஆகாதபடி கவச குண்டலமாக இருப்பார்கள்.

Trending News