நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் குழந்தையாக நடித்து, அதன் பின்பு அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்திலும் மீனா நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித், விஜய் படங்களை தவறவிட்டதை பற்றி கூறியிருந்தார். அதாவது தென்னிந்திய மொழிகளில் அனைத்து படங்களிலும் நான் பிசியாக நடித்து வந்ததால் சில படங்களை தவற விட்டுள்ளேன். அதை நினைத்து நான் வருந்தியதும் உண்டு என கூறியுள்ளார்.
Also Read :6 மாதங்களாக காத்திருந்தேன்.. கணவர் இறந்த பிறகு மீனா எடுத்த அதிரடி முடிவு
அதாவது சிம்ரன், அஜித் கூட்டணியில் வெளியான வாலி படத்தின் வாய்ப்பு முதலில் தனக்கு வந்ததாக மீனா கூறி இருந்தார். அப்போது நான் வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த படத்திற்கு கால்சூட் கொடுக்க என்னால் முடியவில்லை. அதன் பின்பு தான் சிம்ரன் தேர்வாகி வாலி படத்தில் அடித்திருந்தார்.
அதன் பிறகு அஜித்துடன் சேர்ந்து இரண்டு, மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை கிடைத்தது. இதைத்தொடர்ந்து பிரண்ட்ஸ் படத்தின் மலையாள வெர்ஷனில் நான்தான் நடித்திருந்தேன். மேலும் தமிழிலும் விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Also Read :வேறு வழியில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்த அஜித்.. தொடர்ந்து இத்தனை படங்களா?
ஆனால் தேதி பிரச்சனை காரணமாக என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. எல்லா மொழி படங்களிலும் நடித்து வந்ததால் முக்கியமான படங்களில் நடிக்க முடியாமல் போனது. மேலும் இந்த படம் வெற்றி பெறுமா, தோல்வியடையுமா என்பதை முன்கூட்டியே நம்மால் யூகிக்க முடியாது.
ஒரு படத்தில் நம்முடைய முழு உழைப்பையும் போடுகிறோம். ரசிகர்களுக்கு அந்த படம் பிடித்திருந்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது என்று அந்த பேட்டியில் மீனா கூறி இருந்தார். மேலும் இது போன்ற வெற்றிப் படங்களைத் தவற விட்டதை நினைத்து தான் வருந்தியதாகவும் கூறியுள்ளார்.
Also Read :மணிரத்னத்திற்கு நோ சொன்ன விஜய்.. வரலாற்று படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான்