புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கோட் படத்தால் ட்ரோல் செய்யப்பட்டேன், இனி நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்.. இல்ல, புரியல மேடம்!

Meenakshi Chowdhry: நடிகை மீனாட்சி சௌத்ரி சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கோலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை மீனாட்சி சௌத்ரிக்கு கடந்த வருடம் கோட் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் ரிலீஸ் ஆகின. வழக்கமான விஜய்யின் மாஸ், இந்த படத்தை வணிக ரீதியாக வெற்றியடைய செய்தது.

திரைக்கதையை பொறுத்த வரைக்கும் கலவையான விமர்சனங்கள் தான். அதே நேரத்தில் லக்கி பாஸ்கர் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி அடைந்தது.

இதுகுறித்து மீனாட்சி சௌத்ரி தன்னுடைய பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் கோட் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் தன்னை அதிகளவு ட்ரோல் செய்ததாக சொல்லியிருக்கிறார்.

மேலும் லக்கி பாஸ்கர் படம் தனக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தந்தாக சொல்லியிருக்கிறார். இதனால் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

மீனாட்சி சௌத்ரியின் இந்த பேச்சு கோட் படத்தை தரம் தாழ்த்துவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

கோட் படம் மட்டும் நீங்க நடிக்கலைனா நீங்க யாருனே பாதி பேருக்கு தெரிஞ்சு இருக்காது என ஆதங்கத்தையும் கொட்டி வருகிறார்கள்.

Trending News