புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துவிடம் கையும் களவுமாக சிக்கப் போகும் மச்சான்.. விஜயாவிடம் ஒத்து ஊதும் ரோகிணி, மீனாவிற்கு வரும் பிரச்சினை

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் தினமும் எப்படியாவது ஒரு பஞ்சாயத்து அந்த வீட்டில் ஏற்பட்டு விடும். அந்த வகையில் சுருதி கொசு மருந்து அடித்ததால் அண்ணாமலைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். இதை காரணம் காட்டி முத்து, சுருதியை வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்து விடுகிறார்.

சுருதி தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தப்பு பண்ணிவிட்டார், ஆனால் அது புரியாத மாதிரி ஓவர் ரியாக்ஷன் கொடுப்பது கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது. இதற்கிடையில் விஜயா, இந்த பிரச்சனை அனைத்துக்கும் மீனா தான் காரணம் என்று வழக்கம்போல் அவரை குற்றம் சாட்டி பேசுகிறார். பிறகு உண்மை தெரிந்த கொண்டபின் அமைதியாக வாயை மூடிக்கிட்டு இருக்கிறார்.

அடுத்ததாக முத்து, அப்பாவிற்கு மறுபடியும் டஸ்ட் அலர்ஜி வந்து விடக்கூடாது என்ற அக்கறையில் தன்னுடைய ரூமையை விட்டுக் கொடுக்கிறார். இது தான் சான்ஸ் என்று விஜயாவும் நமக்கு ஒரு ரூம் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். பின்பு இதையெல்லாம் பார்த்த ரவி, சுருதியை கண்டிக்கிறார். ஆனாலும் இவர்களுடைய சண்டை கடைசியில் காமெடியாக முடிந்து விட்டது.

Also read: முத்துவின் பேச்சால் சூனியக்காரி ஆக மாறப்போகும் ஸ்ருதி.. இந்த விஷயத்துல எஸ்கேப் ஆன மீனா

அடுத்ததாக விஜயாவும், எப்படியாவது முத்துவையும் மீனாவையும் தனியாக அனுப்பி விட வேண்டும் என்று பிளான் பண்ணி வருகிறார். அதே மாதிரி ரோகிணியும், முத்து மீனா இதே வீட்டில் இருந்தால் நமக்கு பிரச்சினை வந்து விடும் என்ற பயத்தில் அவர்களை எப்படியாவது வெளியே அனுப்பி விட வேண்டும் என்று சதி பண்ணுகிறார். அந்த வகையில் மாமியாரிடம் பல விஷயங்களை மீனாவை பற்றி தப்பாக சொல்லி ஒத்து ஊதி வருகிறார் ரோகினி.

அதாவது அடிக்கடி மாமியாரிடம், இந்த முத்துவும் மீனாவும் ஏதாவது இந்த மாதிரி டார்ச்சர் கொடுத்தாங்க என்றால் நாங்கள் தனிக்குடித்தனம் போய் விடுவோம் என்று மாமியாரை மிரட்டுகிறார். எங்கே ரோகிணி தனியாக போய்விட்டால் பணம் நமக்கு கிடைக்காது என்ற பயத்தில் விஜயா முத்துவை வெளியே அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக மீனாவின் தம்பி ரவுடி கும்பலிடம் சேர்ந்து வட்டிக்கு பணத்தை கொடுத்து கரார் பண்ணும் வேலையை பார்த்து வருகிறார். அந்த நேரத்தில் முத்துவின் நண்பர் காருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அண்ணாமலைக்காக கொடுத்ததால் டியூ கட்ட முடியாமல் போய்விடுகிறது. அதனால் பிரச்சனை ஏற்படும் பொழுது இதற்கெல்லாம் காரணம் மீனாவின் தம்பி தான் என்று முத்துவிற்கு தெரிய வரப்போகிறது.

Also read: பெத்த மகளை கடத்தி அராஜகம் செய்யும் குணசேகரன்.. வாடிவாசலை தாண்டியதால் ஜெயிலுக்கு போன 4 பெண்கள்

Trending News