வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை உடைத்த மீனாவின் அப்பா.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மூர்த்தி

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை கண் முன்பே காட்டுவதால், இதற்கு சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்னிலையில் மீனாவின் தந்தைக்கு இரண்டு மகள்கள் என்பதால் மருமகன்கள் தான் தன்னுடைய சொத்தையும் வியாபாரத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை விரும்பும் மீனாவின் அப்பா ஜீவாவை எப்படியாவது தன் பக்கம் ஈர்க்க திட்டமிடுகிறார்.

இதற்காக திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதை சாக்காக வைத்துக்கொண்டு மீனா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம், ‘எனக்கு யாருமே இல்லை. என்னுடைய வியாபாரத்தை யார் பார்த்துக் கொள்வது. என ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் போது புலம்பிக் தவிக்கிறார்,

இதைப்பார்த்த மூர்த்தி, ‘நீங்கள் குணமாகி வரும்வரை உங்களுடைய வியாபாரத்தை ஜீவா நல்லபடியாக பொறுப்புடன் பார்த்துக் கொள்வான்’ என வாக்களிக்கிறார். இவ்வாறு மீனாவின் அப்பா போட்ட பிளான் கச்சிதமாக நிறைவேறி ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியே வந்து மீனாவின் அப்பா வியாபாரத்தை பார்த்துக்கொண்டிருக்க போகிறான்.

அதன்பிறகு ஜீவாவை தங்கள் உடனே வைத்துக்கொள்ள மீனாவின் அப்பா அடுத்தடுத்த வேலைகளை செய்ய உள்ளார். இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்றிப்போன மீனா இதற்கெல்லாம் ஒத்துழைப்பது கொஞ்சம் கஷ்டம்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீனாவிற்கு தேவையான வசதிகள் இல்லாததால் வசதியை மனதில் வைத்துக்கொண்டே மீனாவும் ஜீவாவை தன்னுடைய அப்பா பக்கம் இழுக்க ஒத்துழைத்தார்.

அத்துடன் ஒரே ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் மட்டுமே வைத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கண்ணன்-ஐஸ்வர்யா, கதிர்-முல்லை, மூர்த்தி-தனம் இவர்கள் மூன்று பேருமே பார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தை இனிவரும் நாட்களில் ஜீவாவிற்கு மீனா தோன்ற வைக்கப் போகிறார்.

Trending News