புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மார்க்கெட்டை இழந்து தவிடு பொடியான மீரா ஜாஸ்மின்.. பாவனா கேசால் பரிதாபமாய் போன கேரியர்

Actress Meera Jasmine: தமிழ் சினிமாவிற்கு மீரா ஜாஸ்மின், ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் ஃபேவரிட் கதாநாயகியாக பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக அஜித், விஜய், மாதவன், பிரசாந்த் போன்ற முன்னணி ஹீரோகளுக்கு ஜோடி போட்டு வந்த நிலையில் சிம்ரன் மற்றும் ஜோதிகா போல் இவருக்கான ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்று அதிகமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதிலும் இவர் நடித்த சண்டக்கோழி படத்தில் துருதுருப்பான நடிப்பும், அழகான சிரிப்பையும் வைத்து மக்களை கவர்ந்திருக்கிறார். அத்துடன் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார். இத்தனை திறமைகளையும் கொண்ட இந்த நடிகையால் சினிமா கேரியரை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

Also read: முதல் படம் மரண ஹிட், தற்போது காணாமல் போன 6 நடிகைகள்.. கவர்ச்சியால் சினிமாவை வெறுத்த மீரா ஜாஸ்மின்

எந்த அளவுக்கு இவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ, அதற்கு நேர் மாறாக இவருடைய மார்க்கெட் சரிந்து விட்டது. இந்த மாதிரி ஒரு நடிகை எங்கே போனார் என்று தேடும்படியாக இவரின் நிலைமை ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் பிரச்சனை என்று தெரியாமலே வான்டடாக சர்ச்சைக்குள் மாட்டிக்கொண்டார்.

அதாவது மலையாள நடிகர் திலீப் செய்த பிரச்சினையால் பாவனா கேசில் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது. அந்த சமயத்தில் மீரா ஜாஸ்மின் தெரியாமல் அவருடன் நடித்து விட்டார். அதனாலயே இவருடைய கேரியர் சின்னா பின்னமாக போய்விட்டது. தான் தலையில தானே மண்ணை வாரி போட்டது போல் இவரோட நிலைமை ஆகிவிட்டது.

Also read: 2 நடிகைகளை ஓரங்கட்டி அறிமுகமான மீரா ஜாஸ்மின்.. ரன் படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாலிவுட் ஹீரோயின்

சும்மாவா சொல்லுவாங்க நேரம் காலம் நல்லா இருந்தா தான் பிழைக்க முடியும் என்று. அது இவரோட விஷயத்தில் சரியாக இருக்கிறது. இவர் என்னதான் ஒழுங்காக இருந்தாலும் இவருடைய கட்டம் சரியில்லாததால் சர்ச்சைக்குள் சிக்கி இவருடைய மார்க்கெட்டை இழந்து தவிடு பொடியாகி விட்டது.

அதனைத் தொடர்ந்து திருமண வாழ்க்கையிலும் சரியாக முடிவு எடுக்காமல் பல பிரச்சனைகளை சந்தித்த இவர் ரொம்ப காலமாகவே சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். ஆனால் தற்போது மறுபடியும் ரீஎண்ட்ரி கொடுக்கும் விதமாக பட வாய்ப்புக்காக தேடிக்கொண்டு அலைகிறார்.

Also read: பாவனாவுடன் முதல் படத்திலேயே அந்தரங்க உறவு.. திமிருடன் மேடையில் உளறிய இயக்குனர்

Trending News