தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் பேவரைட் கதாநாயகியாக உள்ள நடிகைகள் சில படங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் ஹீரோயின் வயதை கடந்தும் தற்போது கவர்ச்சி காட்டி நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்கள்.
அந்த வகையில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன் பிறகு புதிய கீதை, சண்டக்கோழி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் கதாநாயகியாக மாறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். மலையாள சினிமா மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின் இதுவரை 50க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை மீரா ஜாஸ்மின் 2008 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவர் எந்த சமூக வலைதள பக்கத்திலும் இல்லை. இதனால் இவரது ரசிகர்களுக்கு மீரா ஜாஸ்மின் பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தது.

சமீபத்தில் இவர்ஸஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். மீரா ஜாஸ்மின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் ஜெயராமன் உடன் இணைந்து மகள் என்ற படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.

மீரா ஜாஸ்மின் சில வருடங்களுக்கு முன் மிகவும் குண்டாக இருந்தார். தற்போது படு ஸ்லிம்மாக மாறி 40 வயதிலும் சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலானவை குடும்பம் சார்ந்த கதையாகவே இருக்கும். ஆனால் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த உடன் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.