வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இயக்குனருடன் நெருக்கமான போட்டோ.. ஷாக் கொடுத்த மீராஜாஸ்மின்

மலையாள சினிமாவிலிருந்து ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதிகம் கவர்ச்சி காட்டாத கிராமத்து கதையம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீரா ஜாஸ்மினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதன்பிறகு விஜயுடன் புதியகீதை படத்தில் நடித்திருந்தார்.

மேலும், சண்டக்கோழி, ஆயுத எழுத்து படங்களில் இவருடைய நடிப்பு பலராலும் கவரப்பட்டது. இந்நிலையில் 2008 இல் இந்தியாவில் மிகப் பெரியதொழில் அதிபரான மண்டலின் ரஜேஷ் என்பவரை மீரா ஜாஸ்மின் காதலிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தன்னுடைய 32 வது வயதில் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை 2014 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே மீரா ஜாஸ்மின் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு உடல் எடை அதிகமானதால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த மீரா ஜாஸ்மின் தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் ஒரு படத்தில் மீரா ஜாஸ்மின் கமிட்டாகியுள்ளார்.

அதில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் எப்படியாவது விட்டதை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மலையாள இயக்குனரான அருண் கோபி என்பவரை மீரா ஜாஸ்மின் கட்டி அணைத்து இருக்கும்படியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 meera jasmine

meera jasmine

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Trending News