வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

Ratan Tata மாறி இல்லாட்டாலும்.. ஊருக்கு ஒரு முதலாளி இப்படி இருந்தா நல்லா தான் இருக்கும்

வேலைக்கு சரியான நேரத்தில் வந்துவிட வேண்டும். ஆனால், எவ்வளவு லேட்டா வீட்டுக்கு போனாலும் பரவா இல்லை. லீவு அன்றும், வேலையை கொடுத்தால் செய்ய வேண்டும். குடும்பத்தை விட ஆஃபீஸ் க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் ஹைக் மட்டும் கேட்கவே கூடாது. இது தான் தற்போதைய கார்பொரேட் நிலை. தற்போது என்று சொல்வதை விட, இது தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

வெளியூரில் இருந்து தான் பெரும்பாலான மக்கள் சென்னைக்கு வந்து வேலை செய்கிறார்கள். நாளடைவில், இங்கையே செட்டில் ஆகி விடுகின்றனர். இந்த நிலையில், குடும்பம் வெளியூரில் இருக்க, குடும்ப தலைவன் அல்லது தலைவி மட்டும் சென்னையில் தங்கி இருந்து வேலை பார்ப்பது உண்டு. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களுக்கு ஊருக்கு செல்ல 2 மாதத்துக்கு முன்னதே அனுமதி கேட்க வேண்டிய நிலையம் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, தீபாவளி, போனஸ் உடன் சேர்த்து ஸ்கூலுக்கு லீவு விடுவது போல, 10 நாட்கள் லீவு கொடுத்திருக்கிறது மீஷோ நிறுவனம். சமீபத்தில் linked in-இல் ஒரு போஸ்ட் வைரல் ஆகி வருகிறது. அந்த போஸ்டில், reset and recharge என்று குறிப்பிட்டு 9 நாட்கள் லீவையும் அறிவித்துள்ளது.

நல்லா இருப்படா போடா

மீஷோ நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 9 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை அளித்துள்ளது. ஆனால் இப்படி லீவு விடுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இது நான்காவது முறையாம். “லேப்டாப்புகள், ஸ்லாக் மெசேஜ்கள், ஈ-மெயில் , மீட்டிங் அல்லது ஸ்டாண்ட்-அப் கால்கள் என எதுவும் இல்லை, 9 நாட்களுக்கு வேலை தொடர்பான கவலை வேண்டாம்” என நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ லிங்க்ட்இன் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளது.

இதை கேட்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலாளியை நேரில் பார்த்து ஸலாம் அடிக்க தோன்றுகிறது. அந்த முதலாளி க்கு strategy தெரிந்துள்ளது. ஊழியர்கள், மகிழ்ச்சியாக இருந்தால் தான் நிறுவனம் பெரிய அளவுக்கு செல்லும் என்று. அதனால் அவர்களை மகிழ்விக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் customer care ஊழியர்களுக்கு லீவு இருக்கிறதா இல்லையா.. ஒரு வேலை இல்லையென்றால், பொதுமக்கள், குறை தீர்க்கமுடியாமல் போகுமே.. மேலும் இதனால் customers அதிருப்தி அடைவார்களே என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் பாவம், அவர்களும் மனிதர்கள் தானே. எல்லா தரப்பினருக்கு ஒருசேர லீவு கொடுக்க வேண்டும். அந்த 10 நாட்களில், உலகம் ஒன்னும் உருண்டை வடிவத்திலிருந்து சதுர வடிவத்திற்கு சென்று விடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். டாட்டா குழுமம் மாதிரி பல்லாயிரம் கோடி சொத்துக்களை தானமாக கொடுக்காவிட்டாலும் தன்னுடைய ஊழியர்களுக்கு மனசார செய்யும் இது போன்ற முதலாளி வர்க்கத்தை பாராட்டலாம்.

- Advertisement -spot_img

Trending News