புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திடீரென ராகுல் காந்தியை சந்தித்த பேட்ட பட நடிகை.. ஒருவேளை இருக்குமோ!

‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா ஆகாஷ், அதைத்தொடர்ந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிப்பில் இந்தாண்டு வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியானது. இதையடுத்து தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டார் மேகா ஆகாஷ். இது ரசிகர்களுக்கு பெரிய ஷாக் என்றே சொல்லலாம். ஆண்கள் பலர் கண்ணீர் விட துவங்கி விட்டனர். இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு உள்ள எல்லா கொண்டாட்டங்களும் கோலாகலமாக நடந்து திருமணமும் திருவிழா போல நடந்து முடிந்தது.

திருநாவுக்கரசரின் மகனான சாய் விஷ்ணுவை தான் திருமணம் செய்துகொண்டார். திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதில் பல நட்சத்திரங்களை எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு சிலர் வரவே இல்லை.

சாய் விஷ்ணு தந்தை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் என்பதால் தற்போது ராகுல் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிட்டியுள்ளது. சாய் விஷ்ணு – மேகா ஆகாஷ் தம்பதி, நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி உடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்ததாகக் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, அப்போ சீக்கிரமே உங்கள அரசியல்ல பாக்கலாம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News