செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மீண்டும் இணையும் மெகா கூட்டணி.. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் அஜித்

அஜித்தின் துணிவு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் தனது 62வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அஜித் தனது அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பல இயக்குனர்கள் இடம் அஜித் கதை கேட்டு வருகிறாராம். மேலும் அஜித்தை பொறுத்தவரையில் ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களுடனே தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை பணியாற்றுவார்.

Also Read : அஜித்துக்கு எதிராக கிளம்பும் பிரச்சனை.. நீங்க பிழைக்க நாங்க பலிகடா ஆகணுமா?

அந்த வகையில் தான் சமீபத்தில் இயக்குனர் வினோத்திற்கு நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து மூன்று படங்களுக்கு அஜித் வாய்ப்பளித்திருந்தார். இதற்கு முன்னதாக இதே போல் சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு படங்கள் கூட்டணி போட்டிருந்தார்.

இந்நிலையில் அஜித்துடன் மீண்டும் ஒரு இயக்குனர் கூட்டணி போட உள்ளாராம். அதாவது அஜித்தின் வளர்ச்சியில் முக்கியமான டைரக்டரில் ஒருவர் விஷ்ணுவர்தன். அஜித்தின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த பில்லா படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து ஆரம்பம் படத்தில் மீண்டும் இவர்கள் பணியாற்றி இருந்தார்கள்.

Also Read : அஜித் மாதிரி நானும் செய்வேன் என்பதால் வந்த விபரீதம்.. உயிருக்கு போராடும் நிலையில் விஜய் ஆண்டனி

இப்போது விஷ்ணுவர்தன் சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் அடிக்கடி சென்று வருகிறாராம். ஏனென்றால் அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு முறை சத்யஜோதி பிலிம்ஸ் உடன் கூட்டணி போட்ட அஜித் மீதம் ஒரு முறை பாக்கி இருக்கிறது.

ஆகையால் விக்னேஷ் சிவனின் படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன், சத்யஜோதி பிலிம்ஸ் இணைந்து அஜித்தின் படத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணுவர்தன் இத்தனை வருடங்களாக காத்திருந்தார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.

Also Read : ஐஸ்வர்யா ராயுடன் அந்த மாதிரி வேண்டவே வேண்டாம்.. அஜித்துக்காக மொத்தமாக கதையவே மாற்றும் விக்கி

Trending News