Sathya Raj: நக்கல் நையாண்டிக்கு பேர் போனவர் தான் சத்யராஜ். முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் பெரியாரின் கொள்கையை பின்பற்றக் கூடியவர். சிறந்த அறிவு ஆற்றல் உடைய இவர் நகைச்சுவையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் பட்டையை கிளப்புவார்.
அவ்வாறு இன்றளவும் சத்யராஜ் நடித்த கதாபாத்திரங்களில் பேசப்படுவது அமாவாசை கேரக்டர் தான். அதிலும் மணிவண்ணன் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கஅமாவாசை சொல்லும் டாயலாக் இப்போதும் பல மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்போது சத்யராஜ் நடிப்பில் மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஏகப்பத்தினி விரதன் போல் எந்த பெண்ணையும் தலை நிமிர்ந்து கூட பார்க்காத கல்லூரி பேராசிரியராக அறிமுகம் ஆகிறார் சத்யராஜ்.
பிளேபாயாக வலம் வரும் சத்யராஜின் மீம்ஸ்
அதன்பிறகு தான் அவருடைய ஒவ்வொரு மன்மத லீலைகளும் வெளியே வருகிறது. 69 வயதிலும் இவ்வாறு பெண்களுடன் லூட்டி அடிக்கும் கேரக்டரில் சத்யராஜ் நடித்திருப்பது இப்போது மீம்ஸ் கிரியேட்டருக்கு கன்டென்ட் ஆக மாறி இருக்கிறது.
உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அமாவாசை, இன்னும் நீ திருந்தலையா அமாவாசை, சோழ பரம்பரையில் ஒரு பிளேபாய் என பல மீம்ஸ்கள் மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் வெப் சீரிஸ்க்கு குவிந்து வருகிறது. இந்த வயசிலும் பிளேபாயாக அசத்தி இருக்கிறார் சத்யராஜ்.
சத்யராஜின் வைரல் மீம்ஸ்
- சத்யராஜ் இவர் முன்னாடி நிக்க கூட முடியாது
- மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், சூப்பர் மேனாக ஜெயித்தாரா சத்யராஜ்?
- மோடி பயோபிக்கில் நடிக்க சத்யராஜ் லிஸ்ட் போட்ட 5 இயக்குனர்கள்