கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இயக்குனர் மணிரத்னம் பெரும் பொருட்செலவில் முன்னணி நடிகர்கள் பலரை வைத்து இரண்டு பாகங்களாக எடுத்து முடித்திருக்கிறார். இதன் முதல் பாகம் இன்று உலக அளவில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பொன்னியின் செல்வன் படத்தை வைத்து மீம்ஸ்களைப் போட்டு பறக்க விடுகின்றனர். இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் இருவரும் ஒன்றாக குதிரையில் பயணிப்பது போல் காட்சி இருக்கிறது. ஆனால் கதையில் இப்படி இல்லையே என்று அதை வைத்து மீம்ஸ் போட்டிருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் சோழர்களின் பொற்காலத்தை பெருமையுடன் எடுத்துரைப்பதே வைத்து, முன்பு தல தளபதி என பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து சண்டை போட்டுக்கொண்ட ரசிகர்களை குறிவைத்த நெட்டிசன்கள், டேய் நீ பாண்டிய நாடா? இல்ல சோழ நாடா? என வேறுபாடு காட்டி சண்டையை கிளப்பி விட்டிருக்கின்றனர்.

அந்த காலத்தில் சோழ, சேர, பாண்டிய மூன்று மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததால், அதை வைத்தே பொன்னியின் செல்வன் படத்திற்கு மீம்ஸ் போட்டு கலகத்தை தூண்டி உள்ளனர். மேலும் நாவலில் வருவது போன்று தான் கதை இருக்கிறதா எனவும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் புக்கோட வருவதாகவும் கிண்டலடித்தனர்.

மேலும் இந்த படத்தின் கதாநாயகன் கதாநாயகியான வந்தியத்தேவன்-குந்தவை இருவரும் தங்களது எதிரிகளை குறிவைத்து பேசக்கூடிய உணர்ச்சிபூர்வ காட்சிகளை ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இருக்கும் விஜய்சேதுபதி நயன்தாராவை வைத்து மீம்ஸ் போட்டிருக்கின்றனர்.

மேலும் கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி வைத்திருக்கும் காரை பார்த்து செந்தில் ‘இந்தக் காரை இப்ப நீங்க வச்சிருக்கீங்க. காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா’ என்ற ஃபேமஸ் டயலாக்கை பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான அருள்ழி வர்மன் மற்றும் ஆழ்வார்க்கடியான், அநிருத்தர் இடையே நடக்கும் கலந்துரையாடலை வைத்து கலாய்த்துள்ளனர்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் கல்கியின் நாவலில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக எடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நிலையில் இந்த மீம்ஸ்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.