Memes : இப்போது இணையத்தில் பூதாகரமாக போய்க்கொண்டிருக்கும் பிரச்சனை ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து செய்திதான். எது கிடைத்தாலும் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் இதை சும்மாவா விடுவார்கள்.
நன்றாக வச்சி செய்யும் அளவிற்கு ஒவ்வொரு மீம்ஸையும் தெறிக்க விட்டிருக்கின்றனர். இன்னும் எட்டு நாள்ல இஎம்ஐ, வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ்னு வரப்போகுது, இந்த நேரத்துல ஜெயம் ரவி பிரச்சனை நமக்கு தேவையான கோபி என்று கலாய்த்து உள்ளனர்.

அடுத்ததாக இன்று ஆர்த்தி விவாகரத்து வழக்கில் தனக்கு மற்றும் தன்னுடைய குழந்தைகளுக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டிருந்தார். அதை கலாய்க்கும் வகையில் ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார்.

மாசம் நாற்பது லட்சம் எதுக்கு, குழந்தைங்க படிப்புக்கு ரெண்டு லட்சம், மீதி 38 லட்சம் நானும் எங்க அம்மாவும் ஷாப்பிங் போறதுக்கு என ஆர்த்தி சொல்லுவது போல் மீம்ஸ் போட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆர்த்தி நேற்று ஒரு அறிக்கை விட்டிருந்தார்.

அதில் ரவி மோகன் வெறும் காலோடு வெளியேறவில்லை. ரேஞ்ச் ரோவர் கார் எடுத்துக் கொண்டுதான் வெளியேறினார் என்று கூறியிருந்தார். அதை கலாய்க்கும் விதமாக புருஷன் போனது உனக்கு கவலை இல்லை, ரேஞ்ச் ரோவர் போச்சுன்னு தான் கவலையா என்று பங்கம் செய்துள்ளனர்.

அடுத்ததாக ஆபீஸில் ஓனர் திட்டும்போது இதுக்கு பொண்டாட்டியே பரவாயில்லைன்னு தோணுது, ஆனா வீட்ல பொண்டாட்டி திட்டம் போது இதுக்கு ஓனரே பரவால்லையேன்னு தோணுது. ஒரு ஆம்பளையா பொறந்துட்டு நம்ம படுற பாடு இருக்கே என ஒரு ஆண்மகன் அனுபவித்து பதிவு போட்டிருக்கிறார்.