ஆடி மாசம் அம்மா வீட்டுக்கு அனுப்ப கூட ஒரு பொண்டாட்டி இல்லையே.. 90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: ஆடி மாதம் இன்று தொடங்கிவிட்டது. கோவில்களில் இனிமேல் திருவிழா கலைக்கட்டி விடும். கூழ் ஊத்துவதில் தொடங்கி தீமிதி, அம்மனுக்கு வளைகாப்பு பொங்கல் வைப்பது என இல்லத்தரசிகள் பிஸியாக இருப்பார்கள்.

அதேபோல் காலையிலேயே கோவில்களில் அம்மன் பாடல் ஒலிக்க ஆரம்பித்து விடும். இன்னும் சில கோவில்களில் கிடா விருந்து கமகமக்கும். அது போக ஆடி தள்ளுபடி ஆரம்பித்து விடும்.

அனைத்து பெண்களும் விதவிதமாக ஆடை எடுக்க கடைகளில் குவிய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் குடும்பத்தலைவர்கள் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம் தான்.

இது ஒரு பக்கம் இருக்க புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளை சாஸ்திரம் என்ற பெயரில் பெரியவர்கள் பிரித்து விடுவார்கள். பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு புது மாப்பிள்ளைகள் whatsapp ஸ்டேட்டஸில் சோக கீதம் வாசிப்பார்கள்.

இது இப்படி என்றால் 90 கிட்ஸ் நிலைமை அந்தோ பரிதாபம். ஆடி மாசம் அம்மா வீட்டுக்கு அனுப்புவதற்கு கூட ஒரு பொண்டாட்டி இல்லையே என தலையில் கை வைத்தபடி இருக்கின்றனர்.

ஆனால் 2k கிட்ஸ் பிள்ளை குட்டிகளுடன் வலம் வருகின்றனர். இப்படி சோசியல் மீடியாவில் ஆடி மாதம் தொடங்கியதுமே நெட்டிசன்கள் குதூகலமாக மீம்ஸ் போட தொடங்கிவிட்டனர்.

அப்படி நாம் பார்த்து ரசிக்கவும் சிரிக்கவும் கூடிய சில மீம்ஸ் தொகுப்பு.