ஏர்டெல் சிக்னல் கிடைக்கல.. எங்க ஊர சுத்தி எவனோ ஜாமர் வச்சிருக்கான் போல இருக்கு, ட்ரெண்டிங் மீம்ஸ் 

Memes: நேற்று ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். காரணம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கிடைக்காதது தான்.

எல்லோருக்கும் இதே பிரச்சனை என்று தெரியாமல் போனுக்கு ஏதோ ஆயிடுச்சோனு பயந்தவர்கள் ஏராளம். அதேபோல் போனை ரீஸ்டார்ட் செய்து பார்த்து அப்பவும் டவர் கிடைக்காததால் பதற்றம் ஏற்பட்டது. 

அப்புறம் பக்கத்தில் இருப்பவர்களை கேட்டு தெளிவுபடுத்திய பிறகு தான் எல்லோருக்கும் இந்த பிரச்சனை என தெரிந்தது. நான் கூட எனக்கு மட்டும்தான்னு நினைச்சுட்டேன்.

இப்பதான் நிம்மதியா இருக்கு என நெட்டிசன்கள் ஒரு பக்கம் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதேபோல் airtel இன்னுமாயா ஒயர் சரி பண்ணிக்கிட்டு இருக்க. 

ரீசார்ஜ் முடிய போகுதுனா மட்டும் மூணு நாளைக்கு முன்னாடியே கால் பண்ற. நெட்வொர்க் கிடைக்க மாட்டேங்குது என்னதான் பண்ணிக்கிட்டு இருக்க. 

ஏர்டெல்காரன் எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு தூங்கிட்டான் போல இருக்குடோய். இப்படியாக சோசியல் மீடியாவில் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.

அப்படி நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த சில இணையதள மீம்ஸ் தொகுப்பு இதோ.