Memes: இப்போதெல்லாம் அனிருத் பாட்டை கேட்டால் பல பாடல்களின் நினைவு தான் வருகிறது. அவரிடம் சரக்கு தீர்ந்து போச்சு வேற யாரையாவது கூப்பிடுங்கப்பா என ஆடியன்ஸ் கதறுகின்றனர்.

அந்த அளவுக்கு தன்னுடைய பாட்டையே காப்பி அடித்து போடும் நிலைக்கு அவர் வந்து விட்டார். அதுபோக தற்போது சாய் அபயங்கார் டாப் ஹீரோக்கள் தேடும் இசையமைப்பாளராக இருக்கிறார்.

கைவசம் ஏகப்பட்ட படங்கள் அவருக்கு இருக்கிறது. இவர் அனிருத் குழுவில் முக்கியமான ஒருவராக இருக்கிறார். அனிருத் பாடல்களில் பெரும் பங்கு இவருடையது என்ற தகவல்கள் ஒரு பக்கம் இருக்கிறது.

தற்போது கூலி படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி இருக்கிறது. பூஜா ஆட்டத்தில் மோனிகா என வரும் பாடல் ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் வந்த சவடீகா பாடலை நினைவுபடுத்துகிறது.

அதேபோல் இன்னும் சில பாடல்களும் ஞாபகம் வருகிறது என இணையவாசிகள் அனிருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். இவரோட எல்லா பாட்டும் ஒரே மியூசிக் தான்.

உங்களை யாரு என்னோட முந்தைய பாட்ட எல்லாம் ஞாபகம் வச்சுக்க சொன்னது என அனிருத் கேட்பது போல் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
