Memes: தலைவரின் ரசிகர்கள் மாத கணக்கில் காத்திருந்த நிகழ்வு விரைவில் வரப்போகிறது. கூலி படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.

சமீபத்தில் இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் என நடந்து முடிந்தது. தற்போது படத்தில் நடித்திருந்தவர்கள் அத்தனை பேரும் பிரமோஷன் என்ற பெயரில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க சன் பிக்சர்ஸ் டிஜிட்டல் ப்ரமோஷன் வேற லெவலில் செய்து வருகிறது. அதே போல் ஆஃப்லைன் ப்ரோமோஷன் கூட ஜோராக நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி தலைவரின் மனைவியும் தன் பங்குக்கு ப்ரமோஷன் செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு கூலி டிக்கெட்டை இலவசமாக கொடுத்திருந்தார். முதலில் அந்த போட்டோவை பார்க்கும் போது இலவசமா ஆட்டோ கொடுத்து இருக்காங்க போலருக்கு எவ்ளோ பெரிய மனசு என தோன்றியது.

அப்புறம் பார்த்தால் இப்படி ஒரு சம்பவம். ஏதோ நல்லது பண்றாங்கன்னு சிலிர்த்து போய் சில்லறையெல்லாம் சிதற விட்டா உங்க படத்துக்கு பிரமோஷனா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என வெளிப்படையான மைண்ட் வாய்ஸ் கூட கிளம்புகிறது.

இது எல்லாவற்றுக்கும் காரணம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி படம் என்ற பெருமையை தட்டி தூக்க வேண்டும் என்பதுதான். பார்க்கலாம் தலைவர் இந்த ரெக்கார்டை செய்கிறாரா என்று.

இப்படியாக சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
