Memes: இன்று மாலை ஆறு மணி எப்போது வரும் என ரஜினி ரசிகர்கள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் இன்று கூலி படத்தின் சிக்கிடு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே வெளியான இப்பாடலின் கிளிம்ப்ஸ் எல்லோரையும் ஆட்டம் போட வைத்தது. ஆனால் தற்போது முழு பாடலையும் பார்த்தவர்கள் கொஞ்சம் அப்செட் ஆன நிலையில் தான் இருக்கின்றர்.

எதிர்பார்த்த மாதிரி இல்லையே, யூடியூப்ல பார்க்கும் போதே தூக்கம் வருது. தியேட்டர்ல எப்படி இருக்குமோ என சிலர் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்கள் தரமான பாட்டு என ஃபயர் விடுகின்றனர்.

இருந்தாலும் ரஜினி எதிர்ப்பாளர்கள் விடுவதாக இல்லை. அதை போல் இந்த கமெண்ட் வருவதற்கு காரணமும் இருக்கிறது. என்னவென்றால் பாடலில் தலைவரை தவிர எல்லோரும் ஆடுகின்றனர்.

ஆனால் தலைவர் ஏதோ கெஸ்ட் ரோல் மாதிரி வந்து போகிறார். முழு பாடலையும் ராக்ஸ்டார் அனிருத் தான் ஆக்கிரமித்துள்ளார். அதேபோல் இன்னொரு பாசிட்டிவ்வான விஷயம் டி ராஜேந்தர் பாடியது மட்டுமல்லாமல் தன்னுடைய ஸ்டைலில் ஆட்டம் போட்டதுதான்.

இது எல்லாம் ரசிக்கும் படி இருந்தாலும் கூட ரஜினியை மிஸ் செய்கிற உணர்வு இருக்கிறது. ஏன் அவர் காட்சிகள் அங்கங்கு மட்டும் காட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை தியேட்டர் எதிர்பார்ப்புக்காக இருக்கலாம் என தெரிகிறது.

எது எப்படியோ தற்போது இந்த பாடல் பற்றிய மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
