என்ன கரண்ட் பில் இவ்ளோ வந்திருக்கு.. பஸ்ல ஓசியில போகும்போது குளுகுளுன்னு இருந்துச்சா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: தற்போது எல்லாவற்றிலும் விலைவாசி ஏற்றம் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களில் தொடங்கி எல்லாமே வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

அதில் இப்போது மின்கட்டணமும் உயர்ந்திருப்பது தமிழக மக்களை ஷாக் அடைய வைத்துள்ளது. அவ்வளவு வெயிலா இருந்த மே மாசத்துல கூட 1000 ரூபாய் தான் கரண்ட் பில் கட்டினோம்.

ஆனா இந்த மாசம் 5000 கட்ட வேண்டியது இருக்கு. இப்படியே கரண்ட் பில் ஏத்துனா எங்க போறது என சாமானிய மக்கள் புலம்பி வருகின்றனர்.

இன்னும் சிலர் பென்ஷன் வாங்குற காசு வீட்டு செலவுக்கே போயிடுது. கரண்ட் பில் எப்படி கட்ட முடியும் என வெளிப்படையாகவே கதறுகின்றனர். போற போக்க பாத்தா ஸ்கூல் பீஸ் கட்ற மாதிரி கரண்டில் கட்ட லோன் தான் போடணும் போல இருக்கு.

இப்படி மக்கள் ஒவ்வொரு மனநிலையில் இருக்க சிலர் பஸ்ல ஓசியில் போகும்போது குளுகுளுன்னு இருந்துச்சா இப்ப கரண்ட் பில் கட்டுங்க என ஆளும் கட்சி சொல்வது போல் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ஆனாலும் இந்த மின் கட்டண உயர்வு விவகாரம் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அது பற்றிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.