அடடே சித்தப்பு நீங்க எப்ப வந்தீங்க.. 2025 ஆரம்பிச்சு நாலு மாசம் முடிஞ்சிருச்சா, மே தின மீம்ஸ்

Memes: இந்த வருஷம் ஆரம்பிச்சு நாலு மாசம் எப்படி போனதுன்னே தெரியல. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரச்சனையா வந்து கும்மி அடிச்சது தான் மிச்சம்.

காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா என தேவையான தேவயானி சொல்ற மாதிரி மைண்ட் வாய்ஸ் கூட கேக்குது. அந்த அளவுக்கு இந்த வருஷம் ரொம்ப ஃபாஸ்ட்டா தான் போகுது.

அதிலும் இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லாருக்கும் லீவு விட்டாலும் குடும்ப தலைவிகளுக்கு என்னைக்குமே ரெஸ்ட் கிடையாது.

உழைப்பாளர் தினமும் இல்ல லீவும் இல்ல அப்படின்னு புலம்பிக்கிட்டே சமைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நெட்டிசன்கள் மே மாசம் வந்ததை மீம்ஸ் போட்டு கலக்கி கொண்டிருக்கின்றனர்.

ஏப்ரல் மாசம் தான் நம்மள நிம்மதியாக இருக்க விடல இந்த மே மாசம் ஆவது நிம்மதியா இருக்க முடியுதான்னு பார்ப்போம். வாழ்க்கையில ஒண்ணுமே நடக்கலன்னு யாரும் கவலைப்படாதீங்க.

இன்னைக்கு தான் மே ஒன்னு என மொக்கை ஜோக் கூட வைரல் ஆகி வருகிறது. இப்படி சோசியல் மீடியாவில் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.