29 வயசுல ஒரு லட்சம் சம்பளம், சொந்த வீடு, கார் இருக்கனும்னா.. கொள்ளை தான் அடிக்கணும், மாப்பிள்ளை பரிதாபங்கள் மீம்ஸ்

Memes: நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் கல்யாணத்துக்கு பெண் தேடுறது தான் பெரிய பிரச்சனை. அந்த அளவுக்கு பெண்களின் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.

பிறந்த வீட்டிலிருந்து இவ்வளவு சீர், நூறு பவுன் நகை கார் வேண்டும் என தொடங்கி அவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் மாப்பிள்ளை சொந்த வீடு மாதம் பல லட்சம் சம்பளம் கார் என இருக்க வேண்டுமாம்.

அது மட்டுமா கல்யாணத்துக்கு பிறகு தனி குடுத்தனம் ஹோட்டலில் ஆர்டர் செய்துதான் சாப்பிடுவேன் சமைக்கத் தெரியாது. எல்லா வேலையும் மாப்பிள்ளை தான் பாக்கணும் என பெண்கள் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவராக போகின்றனர்.

கல்யாணத்துக்கு தான் இப்படி என்றால் கல்யாணமான பையன்களின் நிலைமையும் அந்தோ பரிதாபம். இதை ஜீ தமிழ் விஜய் டிவி என ரியாலிட்டி ஷோக்கள் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதை பார்த்து எங்களுக்கு கல்யாணமே வேண்டாம் என சிலர் ஓட்டம் பிடிக்கின்றனர். இன்னும் சிலர் நீங்க கேக்குறது எல்லாம் இருக்கணும்னா படிச்சு முடிச்சுட்டு நாங்க கொள்ளை தான் அடிக்கணும் என நொந்து போகின்றனர்.

இப்படி மாப்பிள்ளை நிலைமை அந்தோ பரிதாபமாக இருக்கிறது. அது குறித்த சில ஜாலியான மீம்ஸ் இதோ.