சேதாரத்திற்கு நாங்கள் பொறுப்பு.. சாரிமானு சொல்லி எஸ்கேப் ஆகிருக்கலாம் ஐடியா இல்லாத விஜய், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: தற்போது சோசியல் மீடியாவில் அரசியல் மீம்ஸ் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் கட்சியின் சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அஜித் குமார் காவல் மரணம் மட்டுமல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுபோல் 24 காவல் மரணங்கள் நடைபெற்றிருக்கிறது. அது எல்லாத்திற்கும் ஆளும் கட்சி என்ன பதில் சொல்லப் போகிறது என்பதற்காக தான் இந்தப் போராட்டம்.

சம்பந்தப்பட்ட குடும்பங்கள் கூட இங்கு வந்திருந்தனர். ஆனால் இந்த போராட்டத்தை தடுப்பதற்காக ஆளும் கட்சி சார்பில் பல விஷயங்களை செய்வதாக தற்போது கட்சியினர் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க பொது சொத்தை விஜய் கட்சியினர் செய்தப்படுத்தி விட்டனர் என வீடியோ போட்டு கிழித்து வருகிறது ஆளும் கட்சி. ஆனால் எங்களால் நடந்த சிரமத்திற்கு நாங்களே பொறுப்பேற்கிறோம் சேதாரத்தை சரி பண்ணி கொடுக்கிறோம் என தமிழக வெற்றி கழகம் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில் தொண்டர்கள் மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பேசாம சாரின்னு சொல்லி எஸ்கேப் ஆயிருக்கலாம் ஐடியா இல்லாத விஜய்.

3 மணி நேரம் போராட்டம் என்று சொல்லிட்டு மூன்று நிமிஷம் கூட பேசல. யாரு காலையில டிபன் சாப்பிட்டு வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி மதிய சாப்பாட்டுக்கு கிளம்பி போனவங்களா என மாறி மாறி இரு தரப்பும் கலாய்த்து வருகிறது.

அப்படி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.